இராணுவத் தேவை: காணி அளவீடு! மக்கள் எதிர்ப்பு!- நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்- 2வது தடவை முயற்சியும் ஏமாற்றம்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:39.30 AM GMT ]
மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அங்கு வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன் போது, இந்தக் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலையில், இந்த காணிகளை அளவீடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.
அதற்கு பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவினை கையளிக்கும்படி கோரியுள்ளார். நீதிமன்ற வழக்கு இலக்கம் மட்டுமே உள்ளது, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லையென பொதுமக்கள் பதில் கூறினார்கள்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காணி அளவீடு செய்வதினைத் தடை செய்ய முடியாது. நாங்கள் காணி அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எங்களைக் கைது செய்த பின்னரே நீங்கள் காணிகளை அளவீடு செய்ய முடியும் என பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், நிலஅளவையாளர்கள் வந்த வாகனத்தினை சுற்றி அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இன்றைய தினமும் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படாமல் நில அளவையாளர்கள் திரும்பி சென்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ், சாவகச்சேர் நகரசபை உறுப்பினர் கிஷோர் ஆகியோரும் இப்போராட்டத்தில் உரிமையாளர்களுடன் கலந்துகொண்டனர்.
2வது தடவை முயற்சியும் ஏமாற்றம்
யாழ்.அச்சுவேலி ஜே.285 கிராமசேவகர் பிரிவில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 54பரப்பு காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் மேற்கொண்டிருந்த 2வது முயற்சியும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் மக்கள் நில அளவையாளர்களின் வாகனத்திற்கு முன்பாக உட்கார்ந்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பிரிவு 2பிரசுரத்தில் பொது தேவைக்காக மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதே பிரசுரத் தில் கீழ் பகுதியில் 5வது காலாட்படையின் தலமை காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த 6ம் மாதம் 5ம் திகதி மேற்கொள்ளப்பட்ட 1ம் கட்ட முயற்சியின் பின்னர், மக்கள் குறித்த காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றில் 9குடும்பங்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நீதிமன்றின் வழக்கையும் மதிக்காமல் மீண்டும் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆகியோர் இன்றைய தினம் குறித்த பகுதியில் வந்து மக்களுடன் இணைந்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்களையும் மீறி நில அளவையாளர்கள் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் காலை 8.45 தொடக்கம் நண்பகல் 12மணிவரையில் மக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தினர். இந்நிலையில் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதுடன், தமது அளவீட்டு நடவடிக்கைகளை குழப்பினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நில அளவையாளர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றிணையும் இன்றைய தினம் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மக்களுக்குச் சொந்தமான சுமார் 800 ஏக்கர் காணியை கடற்படை தேவைகளுக்காக சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவில் இதே போன்று கடற்படைத் தேவைக்காக காணி இன்றைய தினம் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அங்கே இன்றைய தினம் எவ்விதமான எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை நாளைய தினம் தென்மராட்சி பிரதேச செயலர் எல்லைக் குட்பட்ட மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் உள்ள மக்களுடைய காணிகள் படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அள வீட்டு நடவடிக்கைள் நாளைய தினம் நடக்கவுள்ளது. அதற்கும் தாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclt1.html
லிபியா செல்ல அனுமதி வழங்கப்படாது: டிலான் பெரேரா- தன்சானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:45.19 AM GMT ]
லிபியாவில் தற்போது சுமார் 500 இலங்கை தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் லிபியாவில் தொழில் புரிந்து வந்தவர்களில் 14 பேர் நேற்று முன்தினம் எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக டுபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன்சானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
தன்சானியாவின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கே. மெம்பே ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.
அவருடன் மேலும் 5 பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கைக்கு வந்துள்ள தன்சானியா வெளிவிவகார அமைச்சர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclt2.html
ராஜபக்ச வருவதைக் கண்டித்து ஸ்கொட்லாந்து முதல்வருக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் கடிதம்- போராட்டத்திற்கு அழைப்பு
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:15.26 AM GMT ]
அந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் பின்வருமாறு,
அன்பான முதலமைச்சர் அவர்களுக்கு,
விடயம்: பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜசபக்சவுக்கான அழைப்பும்.
மிக நீண்ட காலமாகத் தமது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஸ்கொட்லாந்து மக்களின் போராட்டத்தோடு ஈழத்தமிழர்களின் சுதந்திர போராட்டம் தொடர்புபடுவதால், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானியா எங்குமுள்ள தமிழ் சமூகங்கள் சார்பாக, ஸ்கொட்லாந்தின் வரலாற்றுத் திருப்பம் வாய்ந்த தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான கருத்துக்கணிப்பில் வெற்றிபெற தங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கைத் தமது பூர்வீகத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள், பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறிய நாளிலிருந்து சுதந்திரத்துக்காக நீண்ட காலமாகப் போராடிவருகிறார்கள்.
சிறிலங்காவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட தாக்குதல்களும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையும் இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட ஆயுத மோதலின் போது சிறிலங்காவின் இனப்படுகொலை முகத்தை உலகம் கண்டுகொள்ளத் தவறிய வேளை, சிறிலங்காவின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையானது, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் வாயிலாகவும் சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலை குறித்து சனல்-4 ஊடகத்தால் காண்பிக்கப்பட்ட ஆவணப் படங்கள் ஊடாகவும் உலகிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இனப்படுகொலையை நடத்திவரும் சிறிலங்காவில் 2013 பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கான முடிவை அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமைகளுக்கான அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலும், பிரித்தானியாவும் பொதுநலவாய நாடுகளும் அங்கு அந்த மாநாட்டை நிகழ்த்தியதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்தன.
தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான சிறிலங்காவின் நீண்ட வரலாற்றைக் கொண்ட திட்டமிட்ட தாக்குதல்கள் சான்றாக இருப்பதோடு, அவர்கள் பின்பற்றுகின்ற மதங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் சகிக்க முடியாத்தன்மை இன்று தொடர்ந்து வருகிறது. ஸ்கொட்லாந்தைப் போன்றே தமிழர்களும், பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஒற்றையாட்சிக்குள் இணைக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் தமது சொந்தத் தனியரசை நிறுவியிருந்தார்கள்.
அன்று அழைக்கப்பட்டது போல், இலங்கைத் தீவில் இருந்த இருவேறு இராச்சியங்கள் 1833 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் தமது சொந்த நிர்வாக நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டது.
அந்த ஒற்றையாட்சி முறைமையானது பிரித்தானியாவால் வரையப்பட்ட நில எல்லைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. முந்தைய காலனி ஆட்சியாளர் என்ற முறையில், பலியாட்களான தமிழர்களை சிறிலங்காவில் சிங்கள தேசத்தின் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய நியாயமான கடைப்பாடு பிரித்தானியாவுக்கு உள்ளது.
1948, 1956, 1958, 1967, 1977, 1983 இல் நடைபெற்ற தமிழர் எதிர்ப்புப் படுகொலைகள், கலவரங்கள் மற்றும் 2009 இல் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் போன்ற தமிழிர்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களின் காரணமாக ஒற்றையாட்சி நாடு என்பதற்கான நம்பிக்கையானது மோசமாக தோல்வியடைந்தது.
இன்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பை பிரித்தானியா உறுதிப்படுத்தாமல் உள்ளது. அதேவேளை ஸ்கொட்லாந்து மக்கள், நாடுதழுவிய ரீதியிலான ஒரு கருத்துக்கணிப்புக்கு வாக்களிப்பதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் தமது அடையாளத்தை மீள நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழர் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, தமிழ் மக்களுக்கான மனித உரிமைகளை மறுக்கின்ற ஒரு நாட்டை ஆட்சி செய்கின்ற ஒரு இனப்படுகொலைச் சூத்திரதாரியான, ஓரு போர்க் குற்றவாளியான ஜனாதிபதி மகிந்த ராஜசபக்ச பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இன்னும் அழைக்கப்பட இருப்பதானது, ஒரு கருத்துக்கணிப்பு ஊடாக சுதந்திரத்துக்கான உரிமையை நிலைநாட்டவுள்ள ஸ்கொட்லாந்தின் நேர்மைக் குறைவாக நாம் பார்க்கிறோம்.
மேலும், அண்மையில் ஐகிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஸ்கொட்லாந்து, சிறிலங்காவின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் ஒரு பங்காளியாக இருப்பதைத் தடுப்பதற்கு தங்களது சிறந்த பணியறைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுநலவாயப் போட்டிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜசபக்சவை அழைப்பதன் மூலம் நீங்கள் உலகின் மிக மோசமான இனப்படுகொலை நாடுகளுள் ஒன்றுக்கு மரியாதை வழங்கப்போவது மட்டுமன்றி, அடிப்படையில் ஸ்கொட்லாந்தின் கருத்துக்கணிப்பு எதற்கு எதிராக நடைபெற உள்ளது என்கின்ற அந்த நாட்டின் பார்வைகளுக்கும் ஆதரவு வழங்குவதாக அமையும்.
1948 இல் இருந்து நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா.வால் ஒரு சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, மேற்கொண்டு எந்த இரத்தமும் சிந்தாமல் தமிழர்கள் மத்தியில் அமைதியானதும் ஜனநாயக முறையிலானதுமான ஐ.நா.வின் ஆதரவோடு ஒரு கருத்துக்கணிப்பு நடாத்தப்படும்வரை, தென்னாபிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை போன்று, ஒவ்வொரு துறையிலும் சிறிலங்காவை புறக்கணித்து, தனிமைப்படுத்த வேண்டும்.
இறுதியாக, சிறிலங்காவின் திட்டமிட்ட கொடுமைகளதும் இனப்படுகொலையினதும் முடிவைப் பெறுவதில் தமிழர்களின் வேதனையை ஸ்கொட்லாந்து உணர்ந்துகொண்டு, ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதியை அழைக்காது, சிறிலங்காவைத் தனிமைப் படுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கையை எடுக்குமென்று தமிழர்களாகிய நாம் மிகுந்த ஆர்வத்தோடு நம்புகிறோம்.
வெல்லும் வரை போராடுவோம் பிரித்தானியா
ஸ்கொட்லாந்தில் நடைபெற உள்ள பொது நலவாய விளையாட்டு ஆரம்ப விழாவில் சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவதைக் கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகுகின்றார்கள்.
தமிழின அழிப்பைத் தொடர்ச்சியாக நடத்தி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உலகெங்கும் பல்வேறு வடிவங்களில் தமிழர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறிலங்கா அரசைச் சேர்ந்த எவர் வரினும் முழுப் பலத்துடன் எதிர்ப்போம் என உறுதி பூண்டு மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இப்போராட்டம் மிகப் பெருந்தொகையான மக்கள் கலந்து கொள்ளப் போகும் போராட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுலை மாதம் 23 ம் நாள் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள தமிழின அழிப்பு நாள்களில் மறக்க முடியாத ஓர் நாள்.
அந்த நாளில் பொது நலவாய விளையாட்டும் நடைபெற உள்ளதால் கறுப்பு ஜுலை நெருப்பு நினைவுகளோடு தமிழினப் படுகொலையாளி மகிந்த வருவதை முழுப் பலத்துடன் எதிர்க்கத் தமிழ் மக்கள் ஸ்கொட்லன்ட் நோக்கி பேருந்துகளில் புறப்பட உள்ளனர்.
ஜுலை 23 மாலை 3:30க்கு ஸ்கொட்லன்ட் G40 3QZ , GLASGOW, Barrowfield Street இல் நடைபெற உள்ள இந்த மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைக்கின்றார்கள் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclt4.html
Geen opmerkingen:
Een reactie posten