தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

சுடப்பட்ட மலேசிய விமானத்தில் தமிழ் பெண்: புதிய தகவல்!

உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் தமிழ் பெண் ஒருவர் பணியாளராக இருந்துள்ளார். குறித்த இந்த விமானத்தில் தமிழர்கள் எவரும் இருக்கவில்லை என சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்று தற்போது தெரிய வந்துள்ளது.



ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன் என்ற அந்த 30 வயதுப் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர் பிரமீளா என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர். இந்த விமானத்தில் மொத்தம் 295 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 280 பேர் பயணிகள் ஆவர். 15 பேர் பைலட் உள்ளிட்ட ஊழியர்கள் ஆவர்.


இந்த விமானத்தில் தமிழ்ப் பெண்ணான ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரனும் பயணித்தவர்களில் ஒருவர். இவருக்கு 30 வயதாகிறது. விமான ஹோஸ்டஸாக இருந்துள்ளார். இவருக்கு சிறு வயதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்பதுதான் கனவாம்.Malaseja-FelitMalaseja-Felit-01Malaysian-AirlineMalaysian-Airline-01Malaysian-Airline-02Malaysian-Airline-04Malaysian-Airline-03
http://www.jvpnews.com/srilanka/76926.html

Geen opmerkingen:

Een reactie posten