முயல் குட்டிகளை நசித்து கொன்றவருக்கு கனடாவில் வந்த நிலை…
கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த Thinath Ganendralingam என்ற 20-வயது மனிதன் அசட்டு சிரிப்புடன் அவசரத்தில் இரண்டு முயல் குட்டிகளை நசித்து கொலை செய்ததுடன் மற்றொரு குட்டியை மூழ்கடித்தும் உள்ளார் என Barrie நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விலங்கு கொடுமை குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். இவருக்கு 3-வருடங்கள் நன்னடத்தை சோதனையுடன் 7-மாதங்கள் சிறைத்தண்டனையும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு வாழ்நாள் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வயது வந்த ஒருவரின் துணை இன்றி 16-வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுற்றி இருப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகள் சொல்வதற்கே வெறுப்பூட்டத்தக்கதாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ரொறொன்ரோ வடக்கில் 90-கிலோமீற்றர்கள் தொலைவில் Beeton என்ற இடத்தில் உள்ள வயதுவந்தவர்களிற்கான பல்வேறு நடத்தை பிரச்சனைகளிற்கான குரூப் ஹோமில் Ganendralingam இருக்கையில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ரொறொன்ரோ வடக்கில் 90-கிலோமீற்றர்கள் தொலைவில் Beeton என்ற இடத்தில் உள்ள வயதுவந்தவர்களிற்கான பல்வேறு நடத்தை பிரச்சனைகளிற்கான குரூப் ஹோமில் Ganendralingam இருக்கையில் நடந்துள்ளது.
மேமாதம் 8-ந்திகதி இந்த 3-முயல் குட்டிகளும் அவர்களது தாயுடன் பற்றைக்குள் இருந்துள்ளன. ஞானேந்திரலிங்கம் ஒரு வழக்கு பணியாளருடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர் முயல்களை தட்டிக்கொடுத்து கொண்டிருந்துள்ளார். வழக்கு பணியாளர் திரும்பிய சமயத்தில் ஒரு குட்டியை எடுத்து தனது பொக்கெட்டுக்குள் அடைத்து எடுத்துச் சென்று அவரது அப்பார்ட்மென்ட் ரொய்லெட்டுக்குள் மூழ்கடித்துள்ளார். அத்துடன் திருப்தியடையாது திரும்ப சென்று மற்றய இரண்டு குட்டிகளையும் எடுத்து கொன்று தனது அறைக்கு வந்து நசித்து கொன்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
வழக்கு பணியாளர் ஞானேந்திரலிங்கத்தை அவரது அறையில் பார்த்த போது, “எங்கும் இரத்தம் வரும் வரை நான் அதை நெரித்து விட்டேன்”. என சிரித்த வண்ணம் அவரிடம் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் மிகவும் சந்தோசத்துடன் இருந்ததாகவும் பணியாளர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதே தகவல்களை ஞானேந்திரலிங்கம் பொலிசாரிடமும் ஒப்பு கொண்டுள்ளார்.
இதே தகவல்களை ஞானேந்திரலிங்கம் பொலிசாரிடமும் ஒப்பு கொண்டுள்ளார்.
ஞானேந்திரலிங்கம் ஒரு பாலியல் முறைகேடு நிறைந்த கொந்தளிப்பான குழந்தைப்பருவத்தை சந்தித்துள்ளார் என பாதுகாப்பு வழக்கறிஞரும் மன நல வழக்குகளை கையாளும் ஒன்ராறியோ சட்ட உதவி வழக்கறிஞருமான Vince Zenobio தெரிவித்துள்ளார். அத்துடன் 15-வயதில் வீதிகளில் வசித்து ஆண் விபச்சார வியாபாரத்திற்குள் நுழைந்தார் எனவும் கூறியுள்ளார்.
ஞானேந்திரலிங்கத்திற்கு புனர்வாழ்வு பெற வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் வற்புறுத்தினார்.
குற்றவாளிக் கூண்டில் கைகளில் விலங்கு மாட்டிய வண்ணம் நின்ற ஞானேந்திரலிங்கம் தனது நடவடிக்கைகளிற்கு நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். “இந்த கொடிய குற்றத்தை செய்ததற்காக மிகவும் வருந்துகின்றேன். நான் நன்றாக குணமடைந்து சமூகத்தில் ஒரு உறுப்பினனாக வெளியே வர விரும்புகின்றேன்.” என உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறினார்.

Geen opmerkingen:
Een reactie posten