தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

யாழ் சிறுமியை பலாத்காரம் செய்த கடற்படையை காப்பாற்றும் மகிந்த….

வன்னிப் பகுதியில் கடும் வறட்சி நீருக்கு பல மைல் துாரம் நடந்து பெண்கள்…

WoderWoder-01Woder-02


 http://www.jvpnews.com/srilanka/76908.html

ஆறு மாத காலத்திற்குள் 30 ஆயிரம் கோடி ரூபா ஊழல்!

கோப் குழுவினர் இவ் ஊழல் தொடர்பில் அடிக்கடி அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து வந்தும் ,எதுவித மாற்றங்களும் ஏற்படாத நிலையில்,இம்முறை அவர்கள் குறித்த ஊழல் விபரங்களை எழுத்து மூலம் அறிவிக்க இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மின்சார சபை,பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,காப்புறுதிக் கூட்டுத்தபனம்,போக்குவரத்துச் சபை,சுங்கம்,இறைவரித் திணைக்களம்,புகையிரதத் திணைக்களங்களிலேயே அதிக ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2013 இல் மட்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 23,600 கோடி ரூபாவில் நஷ்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க அதேநேரம்,உலகில் நஷ்டத்தில் இயங்கிய ஒரே பெற்றோலிய நிறுவனம் இதுதான் என விமர்சனங்களும் எழுந்திருந்தமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கதே.(ரி)
http://www.jvpnews.com/srilanka/76913.html

யாழ் சிறுமியை பலாத்காரம் செய்த கடற்படையை காப்பாற்றும் மகிந்த….

குறித்த கடற்படை வீரர்களை விளக்க மறியலில் வைத்தால் படையினரின் மனோ திடத்திற்கு களங்கம் ஏற்படக் கூடுமெனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆர்.டி.பீ. விமலசேன மற்றும் நெடுந்தீவிற்குப் பொறுப்பான கவால்துறை அத்தியட்சகர் எஸ்.பீ.சேனாநாயக்க ஆகியோருக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை அத்தியட்சகர்களின் உத்தரவிற்கு அமைய நெடுந்தீவு காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.கே.பீ. சேனாரட்ன குறித்த கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்துள்ளார்.
2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி 18-2014 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சிறுமியைக் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்’ என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களின் போது சிறுமியை வைத்தியசாலைக்கு அனுப்பி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவ்வாறான அறிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு கடற்படை உத்தியோகத்தர்களும் காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும். 1. அஜித் குமார 2. ருபசிங்க ஆராச்சிலாகே சாமர இந்திக்க 3. நதீர தில்சான் ரத்நாயக்க 4. குடாபாலகே ஜயவீர 5. இந்திக்க குமார விதானாரச்சி 6. ரணசிங்க சுமித் சுபாஸ் 7. விகும் சேனாக பியசிறி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிறுமி செய்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாக நெடுந்தீவு காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சேனாரட்ன நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பீ-64-2014 என்ற இலக்கத்தைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் வாக்கு மூலத்தைக் கருத்திற் கொண்டு சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்களை கைது செய்வதாக பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.குறித்த கடற்படை வீரர்களை இலகுவில் விடுதலை செய்யும் நோக்கில் இவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களின் தலைகளை மறைத்து, சீருடை அணிந்த நிலையில் அடையாள அணிவகுப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர், இவ்வாறான ஓர் நிலையில் சிறுமியினால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. குறித்த சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவும் சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை.
படையினரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இவ்வாறான பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக படையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சந்தேக நபர்களை பிரதான நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட போதிலும், பதில் நீதவான் ஒருவரின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கடற்படைவீரர்களுக்கு வெறும் 250 ரூபா ரொக்கப் பிணையிலும், 5000 ரூபா சரீரப் பிணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

11 வயதான சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற போதிலும் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படைவீரர்களின் பணி விசாரணைகள் முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவது வழமையானது என்ற போதிலும், தமது பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அண்மையில் கடற்படைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைஸ்ட் அட்மிரல் ஜயந்த பெரேரா, இந்த சந்தேக நபர்களை காலி கடற்படை முகாமிற்கு இடமாற்றம் செய்துள்ளார்.Nave-Jaffna
http://www.jvpnews.com/srilanka/76923.html

Geen opmerkingen:

Een reactie posten