தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகின்றனர்!– புலனாய்வுப் பிரிவு!

அவலத்தில் கிறிஸ்மஸ்தீவு பிள்ளைகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 12:20.56 AM GMT ]
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின், குறிப்பாக தாய்மார் மற்றும் பிள்ளைகளின், நலன்கள் பற்றி தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோரும் பிள்ளைகள் பற்றிய தேசிய மட்ட விசாரணையின் ஒரு கட்டமாக ஆணைக்குழுவின் தலைவி கில்லியன் ட்ரிக்ஸ் கடந்த வாரம் கிறிஸ்மஸ் தீவிற்கு விஜயம் செய்தார்.
தாம் நான்கு மாதத்திற்கு சென்ற போது இருந்த நிலைமை இன்று மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறதென பேராசிரியர் ட்ரிக்ஸ் அம்மையார் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளில் பெரும்பாலும் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்களாக மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் படுக்கையை நனைக்கிறார்கள். சிலருக்கு பேச்சாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.
கிறிஸ்மஸ் தீவில், 174 பிள்ளைகள் அடங்கலாக 1,102 புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர்.
தமது கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களை பேட்டி கண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjq3.html'
நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ளது!– அமைச்சர் டியூ - சில அமைச்சுக்கள் தேசிய மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதில்லை!– வாசுதேவ
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 12:54.29 AM GMT ]
நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
1970ம் ஆண்டு காலப்பகுதியை விடவும் தற்போது இனவாதம் அதிகளவில் தலைதூக்கியுள்ளது.
துட்டகெமுனு மன்னன் எல்லாள மன்னனுடன் போர் புரிந்தது இனவாதம் காரணமாக அல்ல. இதன் காரணமாகவே துட்டகெமுனு மன்னன், எல்லாள மன்னரின் அஸ்தியை வைத்து விஹாரை ஒன்றை அமைத்து மக்களின் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தார்.
அன்றை விடவும் முன்னேற்றமடைந்த இன்றைய சமூகத்தில் இனவாதம் தலைதூக்குவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. 83ம் ஆண்டில் அரசாங்கம் எடுத்த இரண்டு பிழையான தீர்மானங்கள் 30 ஆண்டு கால போருக்கு வழியமைத்தது.
வடக்கில் கொல்லப்பட்ட 13 படையினரின் சடலங்களையும் கொழும்புக்கு கொண்டு வந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டன. இவ்வாறான ஓர் தருணத்தில் சிங்கள மக்களின் மனோ நிலையை நான் சொல்லத்தேவையில்லை.
அண்மையில் நடைபெற்ற சம்பவங்களைப் பாருங்கள். சிலர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த 14 லட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் கடமையாற்ற வருகின்றனர். முஸ்லிம் நாடுகள் இவர்களை திருப்பி அனுப்ப தீர்மானித்தால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் யாருக்கும் புரிவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குஅளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சுக்கள் தேசிய மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதில்லை – வாசுதேவ
சில அமைச்சுக்கள் தேசிய மொழிக் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மொழி ஆணைக்குழுவினால் அண்மையில் மேல் மாகாணத்தில் ஒழுங்கு செய்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொழிகள் இன்றி கலாச்சாரத்தையோ, உரிமைகளையோ கட்டியெழுப்ப முடியாது. ஒவ்வொரு மொழிக்கும் உரிய அடையாளங்கள் உண்டு. ஒரு மொழியினால் மற்றுமொரு மொழியின் இலக்கியச் சுவையை மெரூகூட்ட முடியாது.
இன்று சில அமைச்சுக்கள் நடாத்தும் நிகழ்வுகளில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்படுவதில்லை. இது ஆரோக்கியமானதல்ல. சில இடங்கள் ஆங்கில மொழியில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.
ஏன் இ;வ்வாறு செய்யப்படுகின்றது என்பது புரியவில்லை. நாம் மீண்டும் காலனித்துவ ஆட்சி காலம் நோக்கி நகர்கின்றோமா?
நாம் ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் எனினும் அதனை தோளில் சுமந்து செல்ல வேண்டியதில்லை.
சிங்களமும் தமிழுமே நாட்டின் தாய் மொழியாக அமைய வேண்டும்.
நாட்டின் உயர் வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிலர் ஆங்கில மொழியை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjq4.html
இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 59001 ரூபா? – அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 01:17.56 AM GMT ]
இலங்கையில் குடும்பமொன்றின் சராசரி மாதாந்தச் செலவு 59001 ரூபா என அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.
நகர்ப்புறங்களைச் சேர்ந்த குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நான்கு பேரைக் கொண்ட நகரத்தைச் சேர்ந்த குடும்பமொன்றின் சராசரி மாதச் செலவு 59001 ரூபாவாகும்.
கிராம பகுதிகளைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் சராசரி மதாந்தச் செலவு 37561 ரூபாவாகும்.
பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் சராசரி மதாந்தச் செலவு 29799 ரூபாவாகும்.
நகரத்தில் ஓர் குடும்பத்தின் உணவுத் தேவைக்காக 18513 ரூபாவும் ஏனைய தேவைகளுக்காக 40487 ரூபாவும் செலவாகின்றது.
கிராமத்தில் ஓர் குடும்பத்தின் உணவுத் தேவைக்காக 13704 ரூபாவும், ஏனைய தேவைகளுக்காக 22857 ரூபாவும் செலவாகின்றது.
பெருந்தோட்டப் பகுதியில் ஓர் குடும்பத்தின் உணவுத் தேவைக்காக 14799 ரூபாவும், ஏனைய தேவைகளுக்காக 15000 ரூபாவும் செலவாகின்றது.
குடும்பமொன்றுக்கு அதிகளவில் செலவு ஏற்படும் மாவட்டமாக கொழும்பு காணப்படுகின்றது என அமைச்சர் சரத் அமுனுகம நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjq5.html
முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகின்றனர்!– புலனாய்வுப் பிரிவு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 01:33.40 AM GMT ]
முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடாத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்த அரச சார்பற்ற நிறுவனத்திற்கு கொழும்பிலும், கிளிநொச்சியிலும் காரியாலயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கக் கூடிய பிழையான தகவல்களை இந்த அரச சார்பற்ற நிறுவனம் திரட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கிளிநொச்சி வேராவில் இந்து வித்தியாலயத்தில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.
இந்த அரச சார்பற்ற நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் முன்னாள் புலிப் போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள், ஊனமுற்றவர்கள், விவாகரத்தானவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பற்றிய விபரங்களை திரட்டும் போர்வையில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் இந்த நிறுவனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjq6.html

Geen opmerkingen:

Een reactie posten