தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

விடுதலைப் புலிகளின் பாதிப்பை மறப்போம்- ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்: ஜனாதிபதி

தங்காலை பிரதேச சபைத் தலைவருக்கு சிம் அட்டைகளை எடுத்துச் சென்ற சகோதரர் கைது - கைதிகள் தப்பிச் செல்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு?
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 01:41.38 AM GMT ]
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு சிம் அட்டைகளை எடுத்துச் சென்ற சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரஜை குராம் சேய்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், சம்பத் விதாரன பத்திரனவிற்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சம்பத்திற்கு, அவரது சகோதரர் இரகசியமான முறையில் தொலைபேசி சிம் அட்டைகளையும் மெமரி அட்டைகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.
சித்தாலேப பாம் எடுத்துச் செல்வது போன்று இந்த அட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சிறைச்சாலைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர். பொருட்களை சோதனையிட்ட போது சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதிகள் தப்பிச் செல்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு?

கைதிகள் தப்பிச் செல்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட பல கைதிகளும் தப்பிச் செல்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் ராகம வைத்தியசாலையில் வைத்து நீலான் என்ற போதைப் பொருள் வர்த்தகர் தப்பிச் சென்றதனைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1996ம் ஆண்டு வெள்ளவத்தையில் ரயில் மீது குண்டு தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான வரதன் என்பர் 2013ம் ஆண்டில் சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன் மாத்தறையில் நடைபெற்ற வெசாக் விழா ஏற்பாடுகளுக்காகச் சென்று தப்பிச் சென்றிருந்தார்.
இதேவேளை, இவ்வாறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எவ்வாறு தடுத்து வைப்பது என்பது குறித்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கைதிகள் தப்பிச் செல்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjq7.html
ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட போவதில்லை!- விமல் வீரவன்ச
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 01:44.42 AM GMT ]
எதிர்வரும் ஊவா மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி தெரிவித்துள்ளது
ஏற்கனவே தமது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவருக்கு ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமானால் தாம் பிரிந்து போட்டியிடப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
ஏற்கனவே ஆளும் கட்சி, தேசிய சுதந்திர முன்னணியுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிச் செயற்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjry.html
விடுதலைப் புலிகளின் பாதிப்பை மறப்போம்- ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 02:31.47 AM GMT ]
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக இடம்பெற்றவை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் ஒன்றில் தீவிரவாத குழுக்களால் அல்லது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
நாட்டு மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கென்று தனியான கலாசாரம் இருக்கிறது. அதனை பாதுகாக்க வேண்டும். விடுதலைப்புலிகளால் நாடு பாதிக்கப்பட்டது.
அதனை மறக்க வேண்டும். அவ்வாறான நிலை மீண்டும் உருவாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்- ஜனாதிபதி
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரியவருகிறது.
ஊவா மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.வி.பியின் கடந்த கால செயற்பாடுகளின் அடிப்படையில் அந்த கட்சியை விமர்சிக்க வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் டிலான் பெரேரா, ஜே.வி.பியினர் 1988-89 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட கொலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவதன் மூலம் மக்கள் மத்தியில் ஜே.வி.பி மீது வெறுப்பை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.
இப்படியான விமர்சனங்களை முன்வைத்தால், முன்னர் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினராக இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அன்றைய செயற்பாடுகள் தொடர்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என ஜனாதிபதி கூறியுள்ளதுடன் அப்படியான விமர்சனங்களை செயய வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjrz.html

Geen opmerkingen:

Een reactie posten