[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 04:54.02 PM GMT ]
எனினும் இந்தியாவுக்கு 135ஆவது இடமே கிடைத்துள்ளது.
நடுத்தர அபிவிருத்தி நாடுகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த முன்னிடம் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 146ஆவது இடமும் பூட்டானுக்கு 136ஆவது இடமும், பங்களாதேஸுக்கு 142ஆவது இடமும் கிடைத்துள்ளன.
டோக்கியோவில் வெளியிடப்பட்ட இந்த சுட்டெண்ணின் அடிப்படையில் கல்வி தரம், வருமானம் போன்றவை கணிப்பிடப்பட்டுள்ளன.
187 நாடுகளை மையப்படுத்தியுள்ள இந்த சுட்டெண்ணில் முதல் 5 இடங்களையும் நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளனெ. இறுதி இடத்தை சியாராலியோன் பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp7.html
இஸ்ரேலுடனான உறவுகளில் மாற்றமில்லை!- இலங்கை அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 11:54.06 PM GMT ]
காஸா நிலப்பரப்பில் இடம்பெற்று வரும் வன்முறைகள் காரணமாக இஸ்ரேலுடனான உறவுகளை ரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் கொள்கைகளில் மாற்றமில்லை என்ற போதிலும், நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவும் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை கைவிட முடியாது என அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை கைவிட தீர்மானித்தமையினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது என சிங்களப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
வன்னிப் போரின் போது டோரா படகுகள் சார் யுத்த கப்பல்கள், ஆளில்லா விமானம், கிபீர் விமானங்கள் போன்றவற்றை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் பலஸ்தீனத்துடனும் மிக நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjq1.html
காணிகளை கொள்ளையிடுவோர் பயங்கரவாதிகளே!– மாவை சேனாதிராஜா
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 12:01.46 AM GMT ]
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காணிகளை சுவீகரிப்பதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காணப்பிரச்சினை காரணமாக லட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
எவரேனும் காணிகளை கொள்ளையிட்டால் அவர்களை பயங்கரவாதிகளாகவே நாம் நோக்குவோம்.
வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை வழங்குமாறே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjq2.html
Geen opmerkingen:
Een reactie posten