[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 05:08.31 AM GMT ]
இலங்கையில் புகலிடம் கோரிய ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சுய விருப்பின் அடிப்படையில் ஐந்து ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாட்டுக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் அதிகளவான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என குடிவரவு திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோருவதற்காக விண்ணப்பித்து காத்திருப்பது பயனற்றது எனவும், பிள்ளைகளின் கல்வியை வீணடிப்பதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தியதனைத் தொடர்ந்து அவர்கள் நாட்டுக்கு செல்ல விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
போர்த்துக்கல் பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்
போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பெசோஸ் கொயில்ஹோ இன்று காலை 8.45 அளவில் இலங்கைக்கு வந்தடைந்தார்.
பிரதமருடன் போர்த்துக்கல் அரசாங்கத்தின் 20 பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர்.
போர்த்துக்கல் பிரதமரை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இலங்கை வந்துள்ள போர்த்துக்கல் பிரதமர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அவர் காலி பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclo4.html
சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழு, போர்க்குற்ற விசாரணைக் குழுவாக மாற்றம்: ஆங்கில ஊடகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 05:10.58 AM GMT ]
இதனடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக சர்வதேச நிபுணர்கள் மூவரை, இலங்கை அரசாங்கம் நியமிக்க வேண்டியேற்பட்டது என்று இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்துகின்ற போதும் அதன் வெளிப்படுத்துகை நிச்சயமாக சர்வதேசத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது.
எனவேதான் அந்த குழுவுடன் இணைந்த வகையில் சர்வதேச நிபுணர்கள் மூவரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று ஜனாதிபதி சர்வதேச நிபுணர்களை நியமிக்கும் வரையில், இலங்கையில் படையினரால் போர்குற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே விசாரணைகள் அவசியம் இல்லை என்ற கருத்தையே இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தி வந்தது.
எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை குழு தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க இலங்கை அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்தே தமது உள்நாட்டு விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை சர்வதேச நியமத்துக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்ததாக என்று ஆங்கில செய்தித்தாள் கருத்தை வெளியிட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyHRULclo5.html
Geen opmerkingen:
Een reactie posten