கரு ஜயசூரியவுடன் பணியாற்ற உன்னை விடுவிக்க தயார்: ஜனாதிபதி கூறியதாக நவீன் தெரிவிப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து ஹரின் விலகல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 03:44.56 AM GMT ]
நவீன் திஸாநாயக்கவை அமைச்சரவையில் இருந்து வெளியேறுமாறும் இல்லையேல் தாம் வெளியேறப் போவதாகவும் ஜனாதிபதி எச்சரித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று நவீன் திஸாநாயக்கவை வினவிய போது தம்மை விலகுமாறு கோருவதை விட தம்மை அமைச்சவையில் விலக்குவதற்கு ஜனாதிபதிக்கு முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவக் குழு தலைவர் கரு ஜயசூரிய போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு அவர் போட்டியிட்டால் அவருடன் இணைந்து பணியாற்ற தாம் உன்னை விடுவிக்க தயார் என்றே ஜனாதிபதி கூறியதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நவீன் திஸாநாயக்க, கரு ஜயசூரியவின் மகள்களில் ஒருவரையே திருமணம் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து ஹரின் விலகல்
ஊவா மாகாணசபை தேர்தலில் பிரமத வேட்பாளராக போட்டியிடும் நோக்கில், தாம் தமது நாடாளுமன்ற நிலையை துறப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
இதன்படி தாம் எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதாக ஹரின் இன்று அறிவித்துள்ளார்.
இதேவேளை ஹரின் விலகினால் ஏற்படும் வெற்றிடத்துக்கு ஊவா மாகாணசபையின் உறுப்பினர் கே.வேலாயுதம் நியமிக்கப்படுவாரா? என்பதை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அல்லது வேலாயுதமும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகிறாரா? என்பதும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclo2.html
சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளால் சர்வதேச நியமங்களை உறுதிப்படுத்த முடியும்!- அமெரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 04:03.45 AM GMT ]
அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் கூறும் போது போர்குற்றம் தொடர்பான உள்ளுர் விசாரணை ஒன்றுக்கு அமெரிக்கா தமது வலுவான ஆதரவை வெளியிடுவதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த விசாரணையானது, நல்லிணகத்தை உறுதிப்படுத்தி இரண்டு தரப்பு மனித உரிமைகள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறத் தக்க முடிவுகளை கொண்டு வரும் வகையில் அந்த விசாரணைகள் அமைவது அவசியமாகும்.
அதேநேரம் குறித்த விசாரணைகளின் போது சாட்சியமளிப்போர் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தப்பட்டாமலிருக்கும் வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமையானது, இலங்கையின் ஜனநாயக பாரம்பரியத்தை பாதிக்கும் என்றும் தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclo3.html
Geen opmerkingen:
Een reactie posten