தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவு!- கடற்படையினர் விசாரணை- அநாதரவான நிலையில் இருந்த இரு சிறுவர்களை மீட்ட பொலிஸார்!

போர்க்கால குற்றங்களையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்கும்!- தலைவர் மக்ஸ்வெல் பரணகம
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 11:37.49 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வரம்பு, யுத்தத்தின் போது ஏற்பட்ட மக்கள் உயிரிழப்புகள் தொடர்பாகவும் விசாரிக்கும் விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் உயிரிழப்புகளின் போது 'இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் நடந்துள்ளனவா' என்று தமது ஆணைக்குழு விசாரிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமது ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவுள்ள சர்வதேச சட்டநிபுணர்களான சேர். டெஸ்மண்ட் டி சில்வா, பேராசிரியர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேண் ஆகியோர் ஓரிரு வாரங்களில் இலங்கை வந்தவுடன் விசாரணைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
உயிரிழப்புகளின் போது இராணுவத்தினர் தங்களின் பணிக்குரிய கடமையை மீறி செயற்பட்டுள்ளார்களா என்றும், விடுதலைப் புலிகளும் இந்த யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மீறிச் செயற்பட்டனரா என்றும் எங்கள் ஆணைக்குழுவின் விசாரணையில் ஆராயப்படும் என்றார் மக்ஸ்வெல் பரணகம.
உங்கள் ஆணைக்குழுவின் விசாரணைகள் சுயாதீனமாக அமையும் என்று நீங்கள் எப்படி உத்தரவாதம் அளிப்பீர்கள் என்று தமிழோசை அவரிடம் வினவியது.
எங்கள் ஆணைக்குழு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பில் இரண்டு தடவைகள், இப்படி மக்கள் மத்தியில் விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்தது...மக்கள் கொடுத்திருந்த எழுத்துமூல முறைப்பாடுகள் பற்றித்தான் நாங்கள் விசாரித்தோம். அந்த விசாரணைகளின் போது நாங்கள் வெளிப்படையாக செயற்பட்டோம் என்று கூறிய பரணகம, தமது எதிர்கால விசாரணைகள் வெளிப்படையாகவே அமையும் என்றும் கூறினார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்துகின்றது
ஆனால், கிளிநொச்சியில் உங்களின் அமர்வு நடந்த போது, சிவில் உடையில் இருந்த பொலிஸ் குழுக்கள் காணாமல்போனவர்களின் உறவினர்களை அச்சுறுத்தி, கட்டாய மரண சான்றிதழ் பெறும்படி பலவந்தப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என்று தமிழோசை ஆணைக்குழு தலைவரிடம் சுட்டிக்காட்டியது.
தமது விசாரணை நடவடிக்கைகளில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபடுத்தப்படவில்லை என்று கூறிய பரணகம, 'நாங்கள் அமர்வுகளை நடத்திய தினங்களில் அரசாங்கத்தின் வேறு தரப்பினர் வழமையான மரணச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியிருந்தனர். அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, 'பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எங்களின் ஆணைக்குழு நியமிக்கப்பட முன்னைய காலத்திலிருந்தே சாதாரண சட்டங்களின்படி இயங்கி வந்தவர்கள். எங்களின் ஆணைக்குழுவுக்கு முன்னர் மக்கள் அவர்களிடம் தான் முறைப்பாடுகளை செய்திருந்தனர். அவர்களும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர்.
முல்லைத்தீவில் நாங்கள் அமர்வை நடத்தியிருந்த அதே தினத்திலேயே பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர். எனவே பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதி, இனிமேல் அப்படி நாங்கள் விசாரணை நடத்தும் நாட்களில் அவர்களின் விசாரணைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றும் கூறினார் பரணகம.
ஏற்கனவே தமது ஆணைக்குழு நடத்தி வந்துள்ள விசாரணையின்படி, காணாமல்போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இருந்தால், அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அந்த முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால், சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஊடாக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்ஸ்வெல் பரணகம தமிழோசையிடம் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclr2.html
தங்காலை பிரதேசசபைத் தலைவரை கமராக்களிலிருந்து காப்பாற்ற முயற்சித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் குறித்து விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 11:56.36 PM GMT ]
தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதான பத்திரனவை, ஊடகவியலாளர்களின் கமராக்களிலிருந்து பாதுகாக்க முயற்சித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ தொப்பியை கழற்றி, பிரதேச சபைத் தலைவரின் முகத்தை மூட முயற்சித்துள்ளார்.
குராம் சேய்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச் செயலுக்காக சம்பத் விதான பத்திரனவிற்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சிறைச்சாலை செல்ல முயற்சித்த போது இவ்வாறு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பதனையும், காணொளிகளை பதிவு செய்வதனையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர்.
ஒரு உத்தியோகத்தர் மட்டுமன்றி கடமையில் ஈடுபட்ட ஐந்து பேரும் பிரதேசசபைத் தலைவரை புகைப்படம் எடுப்பதனை தடுக்க முயற்சித்தனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜீ.பல்லேகம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை பிரதேச சபையின் தலைவர் கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் எனவும், சிறைச்சாலையில் அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclr4.html
அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! - ஆட்சிக் கவிழ்ப்பு அச்சமே அரச சார்பற்ற அமைப்புக்கள் மீதான அடக்குமுறைக்கான காரணம்!- ஏஎப்பி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 12:09.58 AM GMT ]
அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் பணம் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
ஏழு மேற்குலக நாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆறு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன.
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றல், இராணுவத்திற்கு எதிராக போர்;குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் இரண்டு தலைவர்கள் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு அச்சமே அரச சார்பற்ற அமைப்புக்கள் மீதான அடக்குமுறைக்கான காரணம்- ஏஎப்பி
தமது ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற அச்சத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விமர்சனங்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதத்தில் இலங்கையில் அரசசார்பற்ற அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாட்;டுகளை கொண்டு வந்தது.
இதில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் ஊடக மாநாடுகளை நடத்தல் என்பன உள்ளடங்கியுள்ளன.
அத்துடன் அரச சார்பற்ற அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஒழுங்குக்கு அப்பால் செல்லக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை தொடர்ந்தும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பணியாளர்கள் அடக்குமுறைக்கு உட்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது மேலதிகமாக தம்மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் எதிர்ப்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலை ஒட்டியே முன்னெடுக்கப்படுவதாக அரச சார்பற்ற அமைப்புக்களின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க்கை மையமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் பொப் டைட்ஸ_ம் இதே கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார்
.http://www.tamilwin.com/show-RUmsyHRVLclr5.html
யாழ். மக்களின் முகங்களில் புன்முறுவலை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்!- ஆளுநர் சந்திரசிறி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 01:52.17 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் காலையில் எழுந்து நடந்து செல்லும் எந்த இடத்திலும் புன்முறுவலுடன் முகங்களை பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்தோரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து சந்தோசமாக செல்கின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாகவும் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றமை குறித்து திருப்தியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணசபையுடன் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை.
இந்தநிலையில் அந்த மாகாணசபையுடன் தொடர்ந்தும் இணங்கி செயற்படப் போவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பே அரசியல் ரீதியில் நன்மை பெறுவதற்காக தமது நியமனத்தை விமர்ச்சித்து வருகிறது.
அவர்கள் பிரச்சினைகளை மாத்திரம் பேசி வருகின்றனர். எனினும் அபிவிருத்தியை பற்றி பேசுவதில்லை என்று ஆளுநர் குற்றம் சுமத்தினார்.
அண்மையில் மண்டைத்தீவில் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை உட்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட திட்டங்களாக இருந்தன.
அவற்றுக்கு நிதிகளை வழங்குவதற்கு தாம் பின்னிற்கவில்லை என்பதையும் ஆளுநர் சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclsy.html
தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மேன்முறையீடு செய்ய உள்ளார் - மீண்டும் உயிர் அச்சுறுத்தல்: உபுல் முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 01:53.42 AM GMT ]
தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதான பத்திரன மேன்முறையீடு செய்ய உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் பிரஜை குர்ஹாம் ஷெய்க் படுகொலை வழக்கு தொடர்பில் சம்பத் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் முயற்சியில் சம்பத் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தண்டனை விதிக்கப்பட்ட சம்பத் வெலிக்கடைச் சிறைச்சாலையின், விசேட தண்டனைகள் விதிக்கப்பட்ட ஏ3 சிறைக் கூடத்தில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.
மேன்முறையீடு செய்தால் வெலிக்கடைச் சிறைச்சாலையின் எச் மற்றும் எல் ஆகிய பிரிவுகளில் ஒன்றில் சம்பத் தடுத்து வைக்கப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.
இவை சாதாரண கைதிகளை தடுத்து வைக்கும் சிறைக் கூடங்களாகும்.
ஷெய்க் கொலை வழக்கு மற்றும் தண்டனைகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என பிரிட்டன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உயிர் அச்சுறுத்தல்: உபுல் முறைப்பாடு
தமது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர், மீண்டும் தொடர்ந்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு தலங்கம பொலிஸில் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் வருவோர் தமது வீடு அமைந்திருக்கும் தலங்கம பிரதேசத்தில் சுற்றித்திரிவதாகவும் அவர் முறையிட்டுள்ளார்.
ஏற்கனவே தம்மை கொழும்பு நீதிமன்ற பிரதேசத்தில் இருந்து செல்லும் போது மோட்டார் சைக்களிலும் முச்சக்கர வண்டியிலும் சிலர் பின்தொடர்ந்ததாக அவர் கடந்த வாரத்தில் முறையிட்டிருந்தார்.
இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரச சார்பற்ற அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியமை குறித்து விமர்சனம் செய்தமையை அடுத்தே தமக்கு இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclsz.html
தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவு!- கடற்படையினர் விசாரணை- அநாதரவான நிலையில் இருந்த இரு சிறுவர்களை மீட்ட பொலிஸார்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 02:05.44 AM GMT ]
யாழ்ப்பாணம் காரைநகரில் 11 வயது சிறுமி ஒருவர் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அடையாள அணிவகுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இதன் போது பூரிக்களபூமி கடற்படை தளத்தை சேர்ந்த 7 பேர் அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட சிறுமி யாரையும் அடையாளம் காட்டவில்லை என்று கடற்படையின் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேரும் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்தநிலையில் கடற்படையினர் பிறிதாக விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது குற்றவாளி இனங்காணப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அநாதரவான நிலையில் இருந்த இரு சிறுவர்களை மீட்ட பொலிஸார்
மாத்தளை பாபர் தோட்டம் பகுதியில் இரண்டு ஆண் பிள்ளைகள் உணவின்றி வீடொன்றில் இருப்பதாக கிராம சேவகர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று மற்றும் நான்கு வயதான இந்த சிறுவர்களை தந்தை கவனிப்பதில்லை எனவும் தாய் இரண்டு வயதான பிள்ளை அழைத்து கொண்டு அதிகாலையிலேயே பிச்சை எடுப்பதற்காக சென்று விடுவதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் மாலையில் தாய் வீட்டுக்கு வரும் வரை இந்த சிறுவர்களுக்கு தண்ணீர் கூட கிடைப்பதில்லை என தெரியவருகிறது.
ஆடை அணியாது காணப்பட்ட இந்த சிறுவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார்இ அவர்களை நீராட்டிஇ உணவு மற்றும் உடைகளை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து மாத்தளை நீதவான் சம்பத் கமகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவர்களைஇ மாத்தளை கவட்டயமுன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLcls2.html

Geen opmerkingen:

Een reactie posten