தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை- படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது!



வவுனியாவில் பவள் கவச வாகனம் மோதி பெண் ஒருவர் படுகாயம்!- பொலிஸார் - பொதுமக்கள் முறுகல்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 09:57.10 AM GMT ]
வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் பவள் கவச வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரை மோதியதால் அவர் படுகாயமைடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெண்ணை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட இராணுவ பவள் கவச வாகனத்தை வழிமறித்த பொதுமக்கள், விபத்துக்குக் காரணமான இராணுவத்தினரைக் கைது செய்யக் கோரி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றது.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் சமரசம் செய்ய முயற்சித்தனர்.
எனினும் பொதுமக்கள் இராணுவ வாகனத்தை மறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்கள் முரண்பட்டுக் கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclvy.html
நாய் குரைத்ததால் பொலிஸில் முறைப்பாடு செய்த அமெரிக்கர்: யாழில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 10:03.41 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் நாய் குரைத்ததால் அதற்கு எதிராக அமெரிக்கர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 
யாழ் நாவலர் வீதியில் தங்கியிருந்த அமெரிக்க பொறியிலாளரான ஜேம்ஸ் பேர்னின், தான் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் நாய் குரைத்து, கோழி கூவியதால் தனக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாயின் உரிமையாளரான கிராம சேவகர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் நாயை அங்கிருந்த அப்புறப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நாயை வீட்டில் இருந்த அப்புறப்படுத்த வேண்டுமாயின் பொலிஸார் தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம சேவகரின் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
நாய் குரைப்பது, கோழி கூவுவதும் தமது உத்தரவை கேட்டு அல்ல என்றும் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் நாயை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclvz.html
ராஜபக்ஷ அரசு தொழில் வழங்க லஞ்சம் பெறுகிறது: ரணில்- ஐ.தே.கவும் ஸ்ரீ.சு.கட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டும்: டியூ
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 10:20.00 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாய்ப்பை பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலகெதர கிரியாகம பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
வங்கியில் தொழில் பெற ஒரு லட்சம் ரூபா லஞ்சம் கொடுக்கப்பட வேண்டும் , தென் கொரியாவிற்கு செல்ல 5 லட்சம் ரூபா, மத்திய கிழக்கிற்கு செல்ல மூன்று லட்சம் ரூபா, என அரசாங்கம் இன்று தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
வெயில் மழை பாராமல் கண்ணீர் சிந்தி ராஜபக்ஷ அரசாங்கத்தை ஏற்படுத்தியது லஞ்சம் கொடுத்து தொழில் வாய்ப்பை பெறவா? எனவும் ரணில் விக்ரமசிங்க இளைஞர், யுவதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.தே.கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டும் - டியூ. குணசேகர
தேசிய பிரச்சினை தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்றாவிட்டால் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என சிரேஷ்ட அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
முக்கியமான தேசிய பிரச்சினைகளின் போது முன்னாள் பிரதமரும் சுதந்திரக் கட்சியின் தலைவியுமான சிறிமாவோ பண்டாரநாயக்க, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றினார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அந்த வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது எனவும் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும் ஏற்பட்டு வருகிறது.
போருக்கு பின்னர், நாட்டில் நல்லிணக்க முயற்சிகளை சில சிங்கள குழுக்கள் தடுக்க முயற்சித்து வருகின்றன.
இலங்கை பிரச்சினை சர்வதேச நாடுகளுக்கு சென்றுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது வரையறைக்குள் மாத்திரமே செயற்பட முடியும்.
இதனால் இந்த பிரச்சினை உயர்ந்தளவுக்கு செல்லும் முன்னர் அது தீர்க்கப்பட வேண்டும் எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclv0.html
எதிர்க்கட்சியினரை விமர்சித்து வந்த அமைச்சர் தினேஷ் மௌனம் காக்கிறார்!
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 11:06.52 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி சந்தர்ப்பங்களில் ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அரசாங்கத்தை காப்பற்ற எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தற்போது அமைதி காத்து வருகிறார்.
தினேஷ் குணவர்தனவின் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவு கவனத்தை செலுத்தியிருப்பதே அவரது அமைதிக்கு காரணம் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் ஊடகப் பிரிவு உட்பட பல பிரிவுகளுக்கான செலவுகள் மிக அதிகம் என்பதால், ஜனாதிபதி விசாரணை பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக இதுவரை அரசாங்கத்திற்கும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கும் ஆதரவாக குரல் கொடுத்து பேசி வந்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மௌனமாக இருந்து வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclv1.html
அமைச்சர் பசிலிடம் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அபாய அறிவிப்பு- 2500 ரூபாவில் ஒருவர் வாழ முடியாது: பந்துல குணவர்தன
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 11:07.43 AM GMT ]
மகிந்த அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் பதவியை எதிப்பார்த்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த எண்ணத்தை கைவிடுமாறு அரசாங்கத்திற்குள் கடும் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதில் புதிதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணைந்து கொண்டுள்ளார்.
தினசரி நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் பசில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கட்சியின் செயலாளர், பொருளாளர் பதவிகளை வகித்தவர்களை தேர்தலில் போட்டியிடவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகவோ இடமளிக்கவில்லை எனவும் ஜே. ஆர் .ஜயவர்தனவின் அந்த செயல் சரியானது என்றும் பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையிலான 20 வருட கால அரசாங்கத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, 15 வருடங்களுக்கு மேலாக சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார்.
மகிந்த ராஜபக்ஷவின் 10 வருடகால ஆட்சியில் அவர் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.
அவர் இந்த பதவிகளை வகித்த காலத்தில் இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படவில்லை. இவ்வறான நிலையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளமை, மைத்திரிபால சிறிசேனவின் பிரதமராகும் எதிர்ப்பார்ப்பு மீதான தாக்குதலாகும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டால், அது ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு சவாலாக அமைந்து விடும் என்பதால், அவரை அழுத்தங்களுக்கு உட்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக பசில் ராஜபக்ஷவை கருத்தை எடுத்து கொள்ளலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் உயர் மட்டம், அரசாங்கத்திற்கு நெருக்கமான தொழிற்சங்கங்களை பயன்படுத்தி சுகதார அமைச்சை நிர்வகிக்க தெரியாத அமைச்சர், பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என பகிரங்கமாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2500 ஒருவர் வாழ முடியாது என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன
ஒரு நபர் 2500 ரூபாவில் சாகாமல் வாழ முடியும் என தான் இதற்கு முன்னர் கூறியிருந்த போதிலும் அந்த பணத்தில் ஒருவர் ஜீவிக்க முடியாது என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது தனிநபர் ஒருவர் ஜீவிக்க 2500 ரூபா போதுமானதல்ல. ஒரு வாழ்க்கை கொண்டு நடத்த வேண்டுமாயின் தற்போது 3000 ரூபா முதல் 3500 ரூபா வரை தேவைப்படுகிறது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் மாதம் முழுவதும் சாகாமல் உயிர் வாழ வேண்டும் என்றால் 2500 ரூபா போதுமானது என அமைச்சர் பந்துல, 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
தற்போதும் இந்த நிலைப்பாடு செல்லுப்படியாகுமா என அமைச்சரிடம் கேட்ட போது, அதனை பல காலங்களுக்கு முன்னர் தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
2500 ரூபாவில் வாழும் நபர்கள் பலர் இன்னும் வாழ்ந்து வருவதாகவும் எனினும் தற்போது அந்த பணத்தில் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் ஒரு முறை கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, ஒரு குடும்பம் 7500 ரூபாவில் மாதம் ஜீவிக்கலாம் என குறிப்பிட்டிருந்ததுடன் அது நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclv2.html
சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை- படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 11:19.35 AM GMT ]
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் 11வயது , 9 வயது சிறுமிகள் இருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று சந்தேகத்தின் பேரில் கடந்த 18ம் திகதி 7 கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் 30ற்கு  மேற்பட்ட கடற்படையினர் அன்று மாலை அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தப்பட்டு 7பேர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி வழக்கு கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேகநபர்கள் 7பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு ஆட்பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 25ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
சந்தேக நபர்களின் உறவினர்கள் தங்களது கிராம சேவகரது கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தே பிணையில் எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
சிவில் பாதுகாப்பு படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது
சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை நைலோன் கயிற்றை கொண்டு, கழுத்தை இறுக்கி கொலை செய்த பின்னர், உடலை எரித்து விட்டு தப்பிச் சென்ற மற்றுமொரு சிவில் பாதுகாப்பு படை வீரர் முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். முந்தல் மங்கள எலிய பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணியாற்றி வந்த வீரரே இவரால் கொலை செய்யப்பட்டார்.
அனுராதபுரம் அசிரிகம கம்மிரிஸ்கஸ்வெவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 39 வயதான மொஹமட் சரீப் இட்ஷாக் என்ற இந்த சிவில் பாதுகாப்பு படை வீரர், நேற்று காலை பணிக்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் பணியாற்றிய 37 வயதான சிவில் பாதுகாப்பு படை வீரரே இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmsyHRVLclv4.html

Geen opmerkingen:

Een reactie posten