தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

தமிழ் மக்களின் செல்லப் பிள்ளைகளாக கூட்டமைப்பு கருணா புகழாரம்….

ஹக்கீமை ஹஸன் அலி முன் திட்டித் தீர்த்த சம்மந்தன்….

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) 34 ஆவது மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தவை வருமாறு:- “தமிழர்கள் இந்த மண்ணிலே சரித்திர ரீதியாக வாழ்ந்தவர்கள். அவர்களும் இந்த நாட்டின் இறைமை இருக்கின்றது. எனவே. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது ஜனநாயக தீர்ப்பை நமக்கு விரும்பி அளித்துள்ளனர். எனவே, தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்க மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் வந்த போதெல்லாம் அவற்றை நாம் பேசித் தீர்த்து ஒற்றுமையாக செயற்படுகின்றோம். எமது இந்த ஒற்றுமையைச் சிதறடிக்க வெளியிலிருந்து சிலர் முயற்சி செய்கின்றனர். எனினும், கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைக்க முடியாது.
எம்மைப் பலவீனப்படுத்தலாம் என்று எவரும் நினைக்கவேண்டாம். நாம் ஒற்றுமைப் பாதையில் பயணித்து தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெறுவோம். நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். இதனால்தான் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எம்முடன் கேட்டறிகின்றனர்; எம்முடன் பேச்சு நடத்துகின்றனர். அதேவேளை, இந்த நாடுகள் எம்முடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை எமது பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படவேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறோம். எங்கள் மக்களின் இறைமை மதிக்கப்பட வேண்டும். அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரங்களை மதிக்கக் கூடிய விதத்தில் அந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும்.
இந்த நாட்டில் சிங்கள மக்களுக்குள்ள உரிமைகளை தமிழ் பேசும் மக்களுக்கும் வழங்குமாறு இந்த அரசிடம் கேட்கின்றோம். அதிகாரத்தைப் பகிரும் படி கேட்கின்றோம். நாட்டை இரண்டாக்குமாறு நாம் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால், எமது கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகின்றது. இதனால்தான் சர்வதேச தலையீடு வந்தது. இலங்கை விடத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. இந்த அரசு சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அல்லது எமது கோரிக்கைகளை ஏற்று தமிழ் பேசும் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கியிருந்தால் சர்வதேச தலையீடு வந்திருக்கமாட்டாது. தமிழ் பேசும் மக்களுக்கு மாகாணசபை பெரும் சொத்து. ஆனால், ஆளும்தரப்பில் உள்ளவர்கள் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து முஸ்லிம் தலைமை ஆட்சி நடத்துகின்றது. முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது; மக்களை நடுத்தெருவில் நிற்கவிட்டுவிட்டு அரசுடன் சேர்ந்து சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இது வெட்கக்கேடானது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம்கள் சேர்ந்து ஆட்சியமைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமை புறந்தள்ளியது. எனவே, தமது தலைமைக்கு முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுத்தே தீருவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தமது உரிமைக்காக முஸ்லிம் மக்கள் போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை. இதேவேளை, இந்தியாவின் புதிய அரசு மௌனமாக இருக்கிறது என்பதற்காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்கறையில்லையென்று கருதக்கூடாது. உரிய நிலை வருகின்றபோது எல்லாமே நல்ல மாதிரி நடைபெறும்
சர்வதேச மத்தியஸ்தத்துடன் எமக்கான நிரந்தர தீர்வு விரைவில் கிடைக்கும். நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்” – என்று சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/76839.html

ஆளுனருக்கு சந்திரசிறிக்கு ஆராத்தி எடுத்த முதலமைச்சர் CV!

பதவி நீடிப்புக்கு பின் ஆளுனர் சந்திரசிறியும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒருவரோடு ஒருவர் சந்தித்து கொண்ட முதலாவது பகிரங்க நிகழ்ச்சி இதுவே ஆகும். இதன்போதே ஆளுனருக்கு ஆராத்தி எடுத்து, வாழ்த்தி, வரவேற்றார் முதலமைச்சர்.GA-CVGA-CV-01


http://www.jvpnews.com/srilanka/76842.html

தமிழ் மக்களின் செல்லப் பிள்ளைகளாக கூட்டமைப்பு கருணா புகழாரம்….

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் கமநல கேந்திர நிலையம் ஏற்பாடு செய்;த சிறுபோக நெல் அறுவடை விழா ஆனைகட்டியவெளி வயல் கண்டத்தில் நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘ஏதாவது இடமாற்றம், வீதி பிரச்சினைகள், யானை பிரச்சினைகள், வேலை பிரச்சினைகள், மின்சார பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கும் எமது மக்கள்; எங்களைத்தான் கஷ்டப்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை செல்லப்பிள்ளையாக வைத்திருக்கின்றனர். அடுத்த முறையும் அவர்கள் மக்களிடம் வருவார்கள். ஏனென்றால், எமது மக்கள் அவர்களை காப்பாற்றி வைத்திருக்கின்றனர். இவ்வாறு ஒரு பிரச்சினையும் கொடுக்காமல் செல்லப்பிள்ளையாக வளர்த்து வைத்திருக்கின்றனர்.
எமது மக்கள் எதிர்காலத்தில் அரசியலை நன்கு திட்டமிட வேண்டும். எமது மாவட்டத்தில் உள்ள மற்றைய இன மக்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவவை பாரிய முன்னேற்றங்களை கண்டுவருகின்றன.
இன்று கிழக்கு மாகாணசபையை நாங்கள் தவறவிட்டுள்ளோம். மாகாணசபை அமைச்சர்களை எமது தமிழ் மக்கள் சந்திப்பதுண்டா? அவர்களிடமிருந்து எதாவது நன்மைகள் பெறுவதுண்டா? இல்லை. ஆனால், நாங்கள் கைப்பற்றியிருந்தால் எவ்வளவோ நன்மைகளை பெற்றிருக்க முடியும்.
படுவான்கரை பிரதேசத்தை பொறுத்தவரை மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. பல பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் விவசாயிகள் காரில் சென்று வேளாண்மை செய்யக்கூடிய வகையில் வயல்வெளிகளுக்குச் செல்கின்ற பாதைகள் அமைத்து தரப்படும். இவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டிய பல தேவைகள் இன்னும் உள்ளன.
இவற்றை மேற்கொள்வதாக இருந்தால், எமது மக்கள் வெல்லக்கூடிய ஜனாதிபதிக்கு வாக்குகளை வழங்க வேண்டும். ஏனென்றால், நிட்;சயமாக தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது உண்மை. ஆனால், எமது மக்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், யாழ்ப்பாணத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் என்ன சொல்கின்றனரோ அவற்றைக் கேட்டுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்வதற்கே வாக்களிக்கின்றனர்.
சென்ற முறை என்ன செய்தார்கள் எமது மக்களை கொன்றொழித்த சரத் பொன்சேகவுக்குத்தான் வாக்களித்தார்கள். அவர் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் சிந்தித்துப் பாருங்கள். இதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் உணர்வுகளைத் தூண்டியே மேற்கொண்டிருந்தது. உண்மையான தமிழ் உணர்வுள்ளவர்களாக இருந்தால், எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றாவது கூறியிருப்பார்கள். இதற்காக எமது மக்கள் ஏதும் கேள்விகள் கேட்டார்களா? இல்லை.
அனைத்து மக்களும் வளர்ச்சியடைகின்றபோதுதான் பொருளாதாரத்தில் தன்னிறைவு காணலாம். இதுதான் எங்களது ஆசையும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான மக்கள் விவசாயத்தில்தான் தங்கியுள்ளனர். விவசாயம் வளர்கின்றபோதுதான் எமது பொருளாதாரமும் வளர்ச்சியடையும். எனவே அவற்றை முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைளும் எடுக்கப்பட வேண்டும்.
இதனால்தான் நான் நாடாளுமன்றத்தில் நுழைந்த பின்னர் பல குளங்களை அபிவிருத்தி செய்துள்ளேன். மேலும் அபவிருத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளேன்.
விவசாயத்தில் பல நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்று நாங்கள் பாரம்பரிய விவசாய முறையையே கைக்கொண்டு வருகின்றோம். கிழக்கு பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானபீடம் உள்ளது. இதில் கற்கின்ற மாணவர்கள் இப்பகுதிக்கு வருவதுமில்லை என்பதுடன், அவர்களை காணவும் முடியாது. இதனால், எமது பகுதிகளில் நவீன விவசாயமுறை கைக்கொள்ளப்படுவதில்லை. அம்மாணவர்கள் இப்பகுதி விவசாய நிலங்களை நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
அரசாங்கம் விவசாயிகளுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை பயன்படுத்த வேண்டும். இவற்றை தொடர்ந்து பெறவேண்டுமாயின், எமது தமிழ் மக்கள் மத்தியில் மாற்றம் வரவேண்டும். அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்.
இப்பகுதியில் அமைந்திருக்கின்ற கம்பியாற்றுப் பாலத்தை மக்கள்; கேட்டதுக்கு அமைய உடனடியாக அதற்கான நிதியை வேறுவழியில் கொண்டுவந்து கட்டிவித்தோம். ஆனால், எமது மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்தீர்களா? இல்லை. இதற்காக பாலத்தை கட்டாமல் விட்டோமா? கட்டி முடித்துள்ளோம். அதேபோன்று, மண்முனை பாலத்தை எடுத்துக்கொண்டால் அதற்கும் இவ்வாறுதான் எமது மக்கள் நடந்துகொண்டார்கள்.
சற்று சிந்தித்தால்தான் எதையும் சாதிக்க முடியும். இப்போது கூறுகின்றேன் மண்டூர் – குருமண்வெளிக்கிடையிலான பாலத்தையும் நிட்சயமாக கட்டித்தருவேன். ஆனால், நான் சொல்லுகின்றது போல் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் இப்பாலத்தை கட்டித்தருவேன்.
எமது மக்களின் ஆதரவை அரசாங்கத்துக்கு காட்ட வேண்டும். காட்டினால்தான் இவ்வாறான காரியங்களை நிறைவேற்றலாம். மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எப்போதும் தமிழன் தமிழன்தான். வெட்டியெறிந்தலும் தமிழன் தமிழன்தான். நானும் தமிழன்தான் இதனை எவரும் மாற்ற முடியாது. மக்களாகிய உங்களின் நன்மைக்காகதான் சில முடிவுகளையும் மாற்றி எடுத்தேன்’ என்றார்.
http://www.jvpnews.com/srilanka/76847.html

Geen opmerkingen:

Een reactie posten