தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

தாடி இல்லாத டக்ளசை நீங்கள் பார்த்தீர்களா…

கொமன்வெல்த் போட்டியில் தடையை மீறி செல்வாரா மகிந்தர்

கொமன்வெல்த் அமைப்பின் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், பிரித்தானிய மகாராணியும், இந்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பர் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிலங்காவில் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்று புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரித்தானியாவில் சிறிலங்கா அதிபரின் பயணங்கள், புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களால், குழப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில், பிரித்தானிய முடியாட்சிக்கு உட்பட்ட ஸ்கொட்லாந்துக்கு அவர் வருகை தருவதற்கும் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.
சிறிலங்கா அதிபருக்கு எதிராக, கிளாஸ்கோ விளையாட்டு அரங்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. வரும் 23ம் நாள் பி.ப.3.30 மணியளவில் நடக்கவுள்ள இந்தப் போராட்டத்துக்கு பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, மற்றும் வேல்சில் 30 இடங்களில் இருந்து பொதுமக்களை ஏற்றிச் செல்வதற்கான பேருந்துகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பாரிஸ், ஜெனிவா, சூரிச், றோம், அம்ஸ்ரடாம் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் இருந்தும், சிறிலங்கா அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தமிழர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பங்கேற்பாரா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வாயை இறுக மூடிக்கொண்டிருக்கிறது.
http://www.jvpnews.com/srilanka/76860.html

வடமாகாண சபை கிடைக்காமை துரதிஷ்டவசம் மீண்டும் டக்ளஸ் ஒப்பாரி

வாடகை முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதி உதவித்திட்டம் அறிமுகப்படுத்தும் விழா இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘எமது மக்களுக்காகத் தான் நான் அரசியலில் அங்கம் வகிக்கின்றேன். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் தான் நான் மக்களை பாதுகாக்கவோ மக்களுக்கு உதவவோ வழிகாட்டவோ முடிகிறது’ என்றார்.
‘என்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக மக்களை அடகு வைக்க முடியாது. என்றும் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கொண்டுதான் மக்களின் பிரச்சினைகளை, நியாயமான கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்’ என்று சுட்டிக்காட்டினார்.
‘முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதியோடு மட்டும் நின்றுவிடாது மேலதிகமான வருவாயை ஈட்டக்கூடிய வகையில் பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். முச்சக்கரவண்டி சங்கத்தின் கீழ் அனைத்து சாரதிகளும் பதிவை மேற்கொண்டு சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
என்றும் மக்கள் சரியான நிலைப்பாடு எடுக்கின்ற பட்சத்தில் சாரதிகளுக்குரிய ஓய்வூதியம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் தரிப்பிடவசதி பிரச்சினைகளையும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி என்னால் திட்டங்களைச் செயற்படுத்த முடியும்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/76863.html

தாடி இல்லாத டக்ளசை நீங்கள் பார்த்தீர்களா…

ஈ.பி.டி.பி டக்ளஸின் உருவத்தை மனதில் வரித்துக் கொள்கின்ற போது இவரின் தாடிதான் எவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். தாடி இல்லாத டக்ளஸின் புகைப்படங்களை நம் வாசகர்கள் பெரும்பாலும் பார்த்து இருக்க மாட்டார்கள். அதே போல தமிழர் தேசிய உடையில் வேட்டி, நசனல் அணிந்து தோன்றுகின்ற டக்ளஸ்தான் எமக்கு தெரிந்தவர்.
குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் இராணுவ தளபதியாக டக்ளஸ் தேவானந்தா இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எமக்கு புதியவைதான். அதிலும் இந்தியாவில் ஆனந்தன் என்கிற பெயரில் தேவானந்தா இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்த நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மிகவும் அரியவை.
இவர் 1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி களுத்துறைச் சிறைச்சாலையில் மாற்று இயக்க அரசியல் கைதிகளால் தாக்கப்பட்டார். புனர் ஜென்மம் பெற்ற இவர் அதன் பின்புதான் தமிழர் தேசிய உடையை எப்போதும் உடுக்க தொடங்கினார்.

எனவே களுத்துறைச் சிறைச்சாலைத் தாக்குதலுக்கு முன்னரான டக்ளஸ் தேவானந்தாவின் உருவம் தற்போது நமக்கு மறந்து போய் இருக்கும். இந்தியா, இலங்கை உட்பட வெளிநாடுகள் பலவற்றிலும் பழைய டக்ளஸ் தேவானந்தா எடுத்துக் கொண்ட ஒரு தொகை புகைப்படங்களே இவை.EpdpEpdp-01Epdp-02Epdp-03Epdp-04Epdp-05Epdp-06Epdp-07Epdp-08
http://www.jvpnews.com/srilanka/76866.html

Geen opmerkingen:

Een reactie posten