தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் பலி!!



இலங்கை- சீனாவுக்கிடையில் இராணுவ ஒத்துழைப்புகளை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 08:32.12 AM GMT ]
இலங்கை மற்றும் சீன இராணுவத்தினருக்கு இடையில் ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் வகையில், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, சீனாவின் இராணுவத் தலைவரான ஜெனரல் மொஷியோ ஷெய்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமானப்படைத் தளபதி சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைத் தளபதி சீனாவின் விமான மற்றும் பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனமான சீன தேசிய விமான தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
இலங்கை விமானப் படையினரிடம் இருக்கும் பெரும்பாலான விமானங்கள் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclu2.html

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் பலி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 08:55.19 AM GMT ]
உக்ரைனில் கடந்த 17-ந் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தில், மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.
சுபாஷினி ஜெயரத்னம் என்ற சுபா ஜெயா என்ற தமிழ் நடிகையே இவ்வாறு பலியாகியுள்ளார். இவருடன் சேர்ந்து பயணித்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரின் கணவர் மற்றும் மகளும் இந்த சம்பத்தின் போது பலியாகியுள்ளனர்.
இவர் மரணமடைவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
நாடகம், நடனம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்துறைகளில் சிறந்து விளங்கிய சுபா ஜெயா, இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclu4.html

Geen opmerkingen:

Een reactie posten