தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

60 வருட நட்சத்திர வாழ்கை 60 செக்கனில் கலைந்தது: 13 வயதுச் சிறுமியை கற்பழித்தேன் ஒப்புக்கொள்ளும் BBC நிருபர் !

1930ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த நபர் தான் றொல்வ் ஹாரிஸ். இவர் தனது 20 வயதில் பாடல்கள் சிலவற்றை எழுதி பாடி, புகழ்பெற்றார். பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார். BBC தொலைக்காட்சிக்குள் புகுந்த அவர், சிறுவர்களுக்கான நிகழ்சிகள் பலவற்றை நடத்தி பெரும் புகழ்பெற்ற TV ஸ்டாராக திகழ்ந்தார். றொல்வ் ஹாரிஸ் என்றால் பிரித்தானியாவில் தெரியாத நபர்களே கிடையாது என்ற அளவு இவர் புகழ் உயர்ந்து இருந்தது. இதனால் பிரித்தானிய ராஜ குடும்பத்திலும் இவருக்கு செல்வாக்கு அதிகமானது. இளவரசர் சார்ளஸ் மனைவி கமீலா பக்கரை, இவர் அடிக்கடி சந்திப்பது வழக்கம். ராஜ குடும்ப விழாக்களிலும் பங்கேற்றுள்ளார். ஆனால் இவ்வளவு பெயரும் புகழுடனும் இருந்த மனிதர் 60 நொடியில் குடைசாய்ந்தார். காரணம் இவரது இளமை பருவ வாழ்கையாகும்.
இவர் தனது மகளின் நண்பி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது குறித்த பெண்ணுக்கு 13 வயது. இவர் பல இளவயதுப் பெண்களை தன் வலையில் வீழ்த்தி அவர்களை தனது காமப் பசிக்கு இரையாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எவரும் பேச முன்வரவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஒரு பெண்ணால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இவர் மீது பொலிசார் வழக்கு தொடுத்தார்கள். இவருக்கு தற்போது 84 வயது ஆகும். இவர் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் செய்த பிழைகள் எல்லாம் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. பல கட்டங்களில் தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று நீதிமன்றில் கூறிவந்த ஹாரிஸ், இறுதியாக மெளனம் கலைத்தார். நெஞ்சு குமிறிப்போய் அனைத்தையும் உளறிக்கொட்டிவிட்டார்.
ஆம் நான் ஒரு 13 வயதுப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டேன், அவளைப் பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது என்று தொடங்கிய இம்மனிதர், தனது கடந்தகால கசப்பான மிகவும் சகிக்க முடியாத பல விடையங்களை கொட்டி தீர்த்துவிட்டார். தற்போது இவர் குற்றவாளி என்பது நிரூபனமாகியுள்ளது. ஆனால் தண்டனை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பிரித்தானிய மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஹாரிஸ் இன்று தனது அனைத்து செல்வாக்கையும் இழந்த நிலையில் உள்ளார். குழந்தைகளுக்காக BBC யில் புரோகிராம் நடத்திய மனிதர், குழந்தைகளுடன் செக்ஸில் ஈடுபட்டார் என்ற அவப்பெயர் அவரை சூழ்ந்துள்ளது. இதனால் BBC தொலைக்காட்சியும் வெட்க்கி நாணியுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/317.html

Geen opmerkingen:

Een reactie posten