[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 03:40.10 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கினார்.
இதன்படி இலங்கை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சத்தியாஹெட்டிகே தலைமையிலான 9 பேர் இந்தக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழுவின் பதவிக்காலம் மூன்று வருடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தநிலையிலேயே புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbkoz.html
பூமியை கண்காணிக்கும் சொந்த செய்மதியை இலங்கை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 03:45.32 PM GMT ]
இலங்கை தமது சொந்த தயாரிப்பிலான சிறிய ரக பூமியை கண்காணிக்கும் செய்மதி ஒன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதும் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கல்கிஸ்ஸையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் இந்த திட்டத்தின் யோசனை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிதியொதுக்கீட்டை மேற்கொண்டதும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbko0.html
அளுத்கமைக்கு பொதுபலசேனா காரணமெனின், தம்மை கைது செய்யுமாறு ஞானசார தேரர் சவால்
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 03:52.00 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த சவாலை விடுத்தார்.
அரசாங்க அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பொதுபலசேனாவே அளுத்கமை வன்முறைக்கு காரணம் என்று குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் இதற்கான காரணத்தை அவர்கள் அறியமுற்படவில்லை. அளுத்கமை சம்பவங்கள் துரதிஸ்டவசமாக இடம்பெற்றவையாகும்.
எனவே அதற்காக பொதுபலசேனாவின் மீது குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது என்றும் தேரர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbko1.html
Geen opmerkingen:
Een reactie posten