தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

சர்வதேச விசாரணையின்போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா

பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைத்து எச்சரிக்கை கடிதம்!
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 03:58.31 PM GMT ]
பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டே பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றிற்கே இவ்வாறு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துடன் பன்றி இறைச்சி துண்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உயர் பாதுகாப்பு வலயத்தில் பள்ளி வாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக புனர்நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறும் கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவரினால் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், பள்ளிவாசல் நிர்வாகம் சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbko2.html

பிரித்தானிய பிரஜையை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 04:30.09 PM GMT ]
பிரித்தானிய பிரஜை ஒருவரின் பணத்தை முறைக்கேடு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை காலி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்த போது, ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தென்மாகாண ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையான ரிச்சட் கார்செல் என்பவர், தாம் 2004 ஆம் ஆண்டு குறித்த நபரின் ஹோட்டலில் தங்கியிருந்த போது நட்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இந் நிலையில் அவரின் ஆலோசனையின் பேரில் ஹல்டுமுல்ல என்ற இடத்தில் 114 ஏக்கர் காணியை விவசாய நோக்கத்துக்காக கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டார்.
எனினும் சந்தேகநபர் குறைந்தளவு காணியையே கொள்வனவு செய்ததாக பிரித்தானியர் தெரிவித்தார்.
இதன்படி தாம் சந்தேகநபர் தம்மை 48 மில்லியன் ரூபாய்கள் வரையில் ஏமாற்றிவிட்டதாக பிரித்தானியர் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbko4.html
சர்வதேச விசாரணையின்போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 04:03.17 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் போது இந்த வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சீனா கோரியுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமது சிரேஸ்ட இராஜதந்திரிகள் இதனை ஏற்கனவே ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு இரட்டைக் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் சீன அதிகாரி குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbko3.html

Geen opmerkingen:

Een reactie posten