தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

14 வயதான மாணவியை மிரட்டிச் சீரழித்த முதலாளி!

இலங்கையின் மத்திய மாகாணத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தோட்டமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் 14 வயதுடைய தமிழ் மாணவியை மிரட்டி சிங்கள இனத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுத்தி உள்ளார்.

இத் தகவல் இப் பிரதேச மக்களை கண் கலங்க வைத்துள்ளதுடன் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இம்மாணவியின் பெற்றோர்கள் தோட்ட தொழிலாளர்கள். மிகவும் வறுமையான குடும்பம். அம்மா நோயால் பீடிக்கப்பட்டிருந்ததோடு அடிக்கடி சுய நினைவு அற்றவராகவே இருந்துள்ளார். இவரை குணப்படுத்துவதற்காக ஏறி இறங்காத வைத்தியசாலைகளே இல்லை. இதன் காரணமாக குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது.
இதே வேளை வறுமையை பொருட்படுத்தாமலும் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை என்பதால் 2012 ஆம் ஆண்டு சடங்கு சம்பிரதாயத்தினை நல்ல முறையில் செய்தனர். குடும்ப வறுமை காரணமாக தந்தை கொழும்பிற்கு சென்று விட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவி அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்திருந்தாலும் வறுமையை காரணம் காட்டி கல்விக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். இவரின் தந்தைக்கு நாகசேனை நகரம் ஒரு அத்துப்படி. தெரியாதவர்களே இல்லை. இதிலும் மிகவும் நெருக்கமானவர் தான் 60 வயது உடைய சிங்கள கடை முதலாளி.
இவருடைய மனைவி வெளிநாட்டில் தொழில் புரிவதோடு இலங்கைக்கு வருவதில்லை என பிரதேச வாசிகளின் மூலம் தெரிய வருகிறது. இவரது வீட்டில் யாரும் இல்லை என்பதால் தனியாக வசித்து வருகிறார்.
இதனை காரணம் காட்டி சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தையிடம் ஆசை பாங்கான வார்தைகளை கூறி இவரை தன் வசப்படுத்தி தனக்கு உதவி செய்வதற்கு உங்களின் மகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
முதலாளி இவர்களின் குடும்பத்திற்கு தேவையானவர் என்பதால் இதற்கு சம்மதம் தெரிவித்து தனது மகளை ஆடைகளை சலவை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளார்.
தந்தை கொழும்பில் வேலை செய்தாலும் குடும்பத்திற்கு நேரடியாக பணம் அனுப்பவது இல்லை. சம்பந்தபட்ட முதலாளிக்கு அனுப்பப்பட்டு அவரால் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.இச் செயலால்   முதலாளி குடும்பத்தில் நம்பிக்கை உள்ளவராக மாறினார். இதனால் அப் பிள்ளை முதலாளியின் வீட்டு வேலைகளை செய்வதற்காக தொடர்ச்சியாக சென்று வந்தது.
ஒரு நாள் வழமைக்கு மாறாக பலாத்காரம் மூலம் பாலியல் சேட்டைகளில் முதலாளி ஈடுபட்டதாகவும் இவ்விடயத்தை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவதாக பயமுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவிப்பதோடு லிந்துலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது பொலிஸ் விசாரணை இடம் பெற்று வந்ததாலும் சம்பந்தப்பட்டவர் தலைமறைவாகி உள்ளதாக தெரிய வருகிறது.
http://www.jvpnews.com/srilanka/77053.html

Geen opmerkingen:

Een reactie posten