மனைவி, பிள்ளைகள் முன் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்…
கல்பான, வெல்பொல, புன்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆனந்த பிரேமலால் திசாநாயக்க எனும் விவசாயியே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார். சந்தேகநபரான 28 வயதுடைய துசித அல்விஸ் அப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் விவசாயியின் மனைவியிடம் கடந்த ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கியிருக்கிறார். அதைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததால் விவசாயி அவரைப் பல தடவைகள் ஏசியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையுடன் விவசாயியின் வீட்டுக்கு வந்த சந்தேகநபர் விவசாயியுடனும் அவரது மனைவியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் விவசாயியைத் தாக்கியபின் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்பான வைத்தியசாலையில் இன்று காலை வைக்கப்பட்டிருந்தது. களுத்துறை பிரதம நீதிவான் அஜித் மாசிங்க, நீதிவான் மரண விசாரணையை நடத்தியபின் பிரேத பரிசோதனையை நடத்துவதற்கு சடலத்தை நாகொட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரஷாத் சில்வாவின் தலைமையில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக புலன் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
http://www.jvpnews.com/srilanka/77056.html
வவுனியாவில் திருடன் மீது விழுந்த மதில்…
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் காலையில் எழுந்து இடிந்த நிலையில் உள்ள மதிலில் ஆங்காங்கே இரத்தம் வடிந்துள்ளதைக் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் குறித்த வீட்டில் களவு போயுள்ளதுடன், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரும் வீட்டிலுள்ள பொருட்கள் திருடப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்குடும்பத்தினர் சுட்டிக் காட்டி உள்ளனர்.
குறித்த வீட்டில் மூன்று முறை களவுச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையிலும், அப்பிரதேசத்தில் இவ்வாறு களவுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சூழ்நிலையிலும் பொலிஸார் இவற்றைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பில் அப்பிரதேச பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77059.html
யாழ் மிருசுவில் சடலங்களை எரியூட்ட கடிதம் வேண்டுமாம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த பெண் உறுப்பினரின் ஒருவரின் சிபாரிசுக் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியிலுள்ள செம்பாட்டுச் சுடலையில் சடலங்களை எரியூட்டுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளிப்பதாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.
இந்த 50 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான இந்தப் பெண், 1967ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 53 ஏக்கர் காணியினை வைத்திருந்தார். அதில் 3 ஏக்கர் காணியினை சுடலை அமைப்பதற்காக சாவகச்சேரி பிரதேச சபைக்கு வழங்கியிருந்தார்.
இதனையடுத்து, எழுதுமட்டுவாள் தெற்கு, எழுதுமட்டுவான் வடக்கு, கரம்பன், மற்றும் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம் ஆகிய பகுதிகளினைச் சேர்ந்த மக்கள் 3 ஏக்கர் காணியினையும் செம்பாட்டுச் சுடலையென்ற பெயரில் 1969ஆம் ஆண்டு முதல் சடலங்களை எரியூட்டி வந்தனர்.
இந்நிலையில், 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமான இப்பகுதியினை விட்டு மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். மீண்டும் மீளக்குடியமர வந்த போது, இப்பெண்ணின் 50 ஏக்கர் காணி மற்றும் சுடலைக் காணி ஆகியன இராணுவ முகாமாக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், மேற்படி சுடலையில் சடலத்தினை எரியூட்டுவதாயின் இந்தப் பிரதேசத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவரின் சிபாரிசுக் கடிதம் பெறப்பட்டு வந்தால் மட்டுமே இராணுவத்தினர் சடலங்களை எரியூட்ட அனுமதிக்கின்றனர்.
அவ்வாறு இல்லாவிட்டால், இங்கிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சுடலையிலேயே சடலங்களை எரியூட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/77062.html
Geen opmerkingen:
Een reactie posten