தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

34 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை உறவினர்களைச் சந்தித்த பெண்ணின் கண்ணீர்க் கதை!!

நாவற்குழியில் இரு இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்!

குறித்த இளைஞன் நேற்று தனது வீட்டிலிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனையடுத்து தனது நண்பனையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் நாவற்குழி பகுதியில் வைத்து வெள்ளை வாகனம் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கியைக் காண்பித்து அவர்களை கைது செய்ததை அருகிலிருந்த கடையில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபைச் சாரதியாகப் பணியாற்றும் குறித்த இளைஞரின் தந்தை சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77046.html

34 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை உறவினர்களைச் சந்தித்த பெண்ணின் கண்ணீர்க் கதை

குமரி மாவட்டத்தில் பழவிளை, பெருமாள்புரம், ஞாறாவிளை, கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. அங்கு ஏராளமான இலங்கை அகதிகள் தங்கி உள்ளனர்.
இவர்களில் பலரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் வசித்து வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது குடும்பத்தினரை பிரிந்து தமிழகம் வந்து வசிக்கும் அகதிகள் பலருக்கு, இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற இலங்கை அகதிகளுக்கு இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுடன் உறவை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை மேற்கொண்டது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் குமரி மாவட்டச் செயலர் டாக்டர் மோகன் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் இலங்கை அகதிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
மாவட்ட ஆட்சியரும் சந்திப்பு நிகழ்ச்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இலங்கையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் குமரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஞாறாவிளை அகதிகள் முகாமில் 34 ஆண்டுகளாக உறவினர்களை பிரிந்து தனியாக வசித்து வந்த இந்திராணி என்ற பெண்ணின் உறவினர்களை இலங்கையில் கண்டுபிடித்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதுபோல் பெருமாள்புரம் முகாமில் வசித்தும் வரும் சுகந்தி சுப்பிரமணியத்தின் உறவினர்களும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட அகதிகள் ஒருவரை ஒருவரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கச் செயலர் உள்ளிட்டோருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Indan-Refujee
http://www.jvpnews.com/srilanka/77049.html

Geen opmerkingen:

Een reactie posten