தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

மூதூர் கொலைகள்! சாட்சியங்களை பதிவு செய்ய குற்றப் புலனாய்வு தரப்பினர் நடவடிக்கை

கொழும்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணி விற்பனை- கைதிகளுடன் சிறை அதிகாரிகள் நெருங்கிய தொடர்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:58.14 AM GMT ]
கொழும்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் பல பகுதிகளிலும் போலியான ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதான சந்தேக நபருக்கு இரண்டு பேர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலி ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் கொள்வனவாளர்களை இணைத்தல் ஆகிய நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்வதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள 40 பேர்ச்சஸ் காணியை இரண்டு பேருக்கு தலா 90 லட்ச ரூபாவிற்கு இந்த சந்தேக நபர் விற்பனை செய்துள்ளார்.
இந்தக் காணியை தமிழர் ஒருவர் யாழ்ப்பாண வங்கியொன்றில் அடகு வைத்திருந்ததாகவும், மீட்காத காரணத்தினால் வங்கி காணியை சுவீகரித்துக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காணிக் கொள்ளையுடன் தொடர்புடைய ஒரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதிகளுடன் சிறை அதிகாரிகள் நெருங்கிய தொடர்பு
சிறைச்சாலையிலிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கைதிகளுடன், சிறைச்சாலை அதிகாரிகள் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆயுள் மற்றும் மரண தண்டனைக் கைதிகளுடன் அதிகாரிகள் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.
கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களை தொலைபேசி ஊடாகவே இந்தக் குற்றவாளிகள் மேற்கொள்கின்றனர்.
இந்தக் குற்றச் செயல்களுக்கு சிறைச்சாலை உயர் அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
அண்மையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது கைதியொருவரின் செல்லிடப்பேசியை மீட்டதாகவும் அதனை பரீட்சித்து பார்த்த போது, அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் காணப்படும் மிக நெருங்கிய தொடர்பு அம்பலமாகியுள்ளது.

மூதூர் கொலைகள்! சாட்சியங்களை பதிவு செய்ய குற்றப் புலனாய்வு தரப்பினர் நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:40.09 AM GMT ]
மூதூரில் வைத்து 17 தொண்டு பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான சாட்சியங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கும் செயற்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நீண்டகாலமாக விசாரணை நடத்தப்படாதிருந்த நிலையில் அது குறித்த விசாரணைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி இருந்தன.
இந்த நிலையில் இது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வகையில், இந்த சம்பவம் தொடர்பான சாட்சியங்களை ஆவணப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கும் செயற்குழுவின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Geen opmerkingen:

Een reactie posten