தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பருத்தித்துறையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய சுரங்கப் பாதை கண்டு பிடிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது.
இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர்.
இந்நிலையில் இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் பருத்தித்துறைப் பகுதியில் இவ்வாறான சுரங்கப் பாதையொன்று உள்ளதென்று பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் முக்கிய கடல்வழிப் பிரயாணங்களை மேற்கொள்ளவும் இலங்கை இராணுவத்தின் கண்களுக்குள் மண் தூவி முக்கிய பிரமுகர்களை விடுதலைப் புலிகள் பருத்தித்துறைக் கடல் வழியாக வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரியவருகின்றது.
இது ஒரு முழுமையான சுரங்கப்பாதை என்பதை இன்னமும் இராணுவத்தினர் உறுதி செய்யவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten