தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

இராவணன் வழிபட்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பில் விஷேட அதிரடி படையினர் 26 மாடுகளை மீட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 04:42.15 PM GMT ]
மட்டக்களப்பு, மயிலம்பாவெளியிலுள்ள விஷேட அதிரடி படையினர் 26 மாடுகளைக்  நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
இந்த மாடுகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திடம் விஷேட அதிரடி படையினரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பண்ணையாளர்களிடமிருந்து வாங்கிய இந்த மாடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டிருக்காமையினாலேயே பறிமுதல் செய்ததாக விஷேட அதிரடி படையினர் ஏறாவூர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த மாடுகளை எடுத்து வந்தவர்கள் அவற்றை வாங்கியதற்கான பற்றுச் சீட்டுக்களைக் கொண்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மாடுகள் கால்நடையாகவே கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாடுகள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராவணன் வழிபட்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவம் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 04:24.33 PM GMT ]
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தி;ன் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இராவணன் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்டு அருளாட்சி புரிந்துவரும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நேற்று கொடிச்சீலை கொண்டு வரும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை விநாயக வழிபாடுகளுடன் பூசைகள் ஆரம்பமாகி விசேட யாக பூசை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கு பூசைகள் இடம்பெற்றன.
கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தம்பத்துக் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தம்பத்துக்கு பூசைகள் செய்யப்பட்டு வாத்தியங்கள், மேள தாளங்கள், வேத பாராயணங்கள் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் செய்யப்பட்டு சுவாமி ஊர்வலம் இடம்பெற்றது.
இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அன்னதான சபையினரால் அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

Geen opmerkingen:

Een reactie posten