[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 02:04.08 PM GMT ]
வடக்கு மாகாணசபைக்காக நடத்தப்படும் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைக் கொண்ட தமிழர்களை இலங்கை பிரஜைகளாக கருதும் வகையில் அவர்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள பிரஜாவுரிமை பெயர்களை மாற்றுவதற்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன பரிந்துரைத்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தீர்வுக்கு 13வது அரசியல் அமைப்பு தீர்வாக அமையாது என்ற அடிப்படையில் இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
13வது அரசியல் அமைப்பின் அதிகாரங்கள் அனைத்துமே ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரின் கீழேயே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இந்திய வம்சாவளிகளின் பூர்வீக பெயர் மாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 02:22.17 PM GMT ]
எதிர்கால சந்ததிகள் இலங்கையில் வாழ்வதற்கு பிரச்சினையற்ற ஏதுநிலைகளை தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளிலும், பிறப்புச் சான்றிதழ்களிலும் இந்திய பூர்வீக பெயர்கள் அகற்றப்பட்டு அவர்கள் இலங்கை பிரஜை என்ற வகையில் மாற்றீடு செய்யப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இதன்படி, பெருந்தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்கள், இலங்கையில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் என்ற அடிப்படையில், அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
எனவே, அவர்கள் சமவுரிமைகளுடன், அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொண்டு வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்த் பேசும் மக்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் 19 ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்து வரப்பட்டனர்.
எனினும், 1960ம் ஆண்டுகளில் அவர்களில் பலர் சிறிமா � சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி மீளவும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன், இன்னும் பலர் இலங்கையில் பிரஜாவுரிமை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten