தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

குரோதம் வேண்டாம்! ஒன்றிணையுங்கள்!- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

கூடங்குளம் போராட்டக் களத்தில் 'புலித்தடம் தேடி...'!- புத்தக வெளியீடு!
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 07:44.36 AM GMT ]
இலங்கையில் போர் பாதித்த பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்து, அந்நாட்டு இராணுவத்தின் அச்சுறுத்தல் மற்றும் கெடுபிடிகளையும் மீறி நேரில் சென்று கள ஆய்வு செய்து, மகா.தமிழ்ப் பிரபாகரன் எழுதிய 'புலித்தடம் தேடி... “இரத்த ஈழத்தில் 25 நாட்கள்“ என்ற புத்தகம் இடிந்தகரையில் வெளியிடப்பட்டது.
இலங்கையில் 2009ல் நடந்த போருக்கு பின்பு போர் பாதித்த பகுதிகளுக்கும், கிழக்கு மாகாணம், கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்து அதனை மகா.தமிழ்ப் பிரபாகரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதியிருந்தார்.
தற்போது அது புத்தகமாக, அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடக்கும் களத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இடிந்தகரையில் நேற்று  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற இது தொடர்பான நிகழ்ச்சியில், டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் சத்திய சிவராமன், பேராசிரியர் மணிவண்ணன், சுப.உதயகுமாரன், புஷ்பராயன், சா.முகிலன் ஆகியோர் வெளியிட, இடிந்தகரை போராட்ட பெண்கள் பெற்றுக் கொண்டனர்.
புத்தக வெளியீடு நிகழ்வு முடிந்து இடிந்தகரையை விட்டு அழைப்பாளர்கள் வெளியேறும் வேளையில், காவல்துறையினர், இடிந்தகரைக்கான பாதையில் நின்றுகொண்டு அவர்களை விசாரித்ததோடு, வந்திருந்தவர்கள் அனைவரின் விவரங்களையும் பெற்றுக்கொண்டு, அவர்கள் வந்த வாகனங்களையும், அவர்களையும் வீடியோ கமெராவில் பதிவு செய்து கொண்ட பின்பே வெளியேற அனுமதித்தனர்.

குரோதம் வேண்டாம்! ஒன்றிணையுங்கள்!- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 06:30.58 AM GMT ]
குரோதம் மிக்க அரசியலை கைவிட்டு, ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை வழங்குவது அனைவரதும் கடமை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்சியை பாதுகாக்கும் அரசியலுக்கு பதிலாக, நாட்டை பாதுகாக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாதங்களாலும், போராட்டங்களாலும் நாட்டை ஒருபோதும் வெற்றிக் கொள்ள முடியாது என்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

Geen opmerkingen:

Een reactie posten