தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பிரித்தானிய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பை ரத்துச்செய்த கோத்தபாய

சஞ்சீவ பண்டாரவுடன் எட்டு பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 06:18.04 AM GMT ]
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட சஞ்சீவ பண்டாரவை ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மிரிஹான பொலிஸில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளருடன் மேலும் 8 மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி, பல்கலைக்கழக மாணவர்களை இணைத்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதாக சஞ்சீவ பண்டார உட்பட 09 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பை ரத்துச்செய்த கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 04:45.19 PM GMT ]
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ரத்து செய்துள்ளார்.
இந்த சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் தங்கியுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக்குழு இன்று கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியது.
அமைச்சர்களான பசில் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இந்தக் குழுவினர் சந்தித்தனர்.
இதேவேளை தங்காலையில் 2011ம் ஆண்டில் இடம்பெற்ற பிரித்தானிய பிரஜை ஒருவரின் கொலை தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்படும் என்று இலங்கையின் அமைச்சர்கள், பிரித்தானிய குழுவினரிடம் உறுதியளித்துள்ளனர்.
எனினும் இந்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையெனில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் போது பிரித்தானிய பிரதமர் கேள்வி எழுப்புவார் என்றும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten