தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பம்பலப்பிட்டியில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி: 13வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 73 பேர் காலியில் தடுத்து வைப்பு
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 05:49.25 AM GMT ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு  சென்றுக் கொண்டிருந்த படகு பழுதானதில் தத்தளித்துக் கொண்டிருந்த 73 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இவர்கள், காலி துறைமுகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7.30 மணியளவில் அழைத்துவரப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து 290 கடல் மைல் தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருப்பதாக மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடந்த 23 ஆம் திகதி தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த 73 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 70 பேருடன் கடந்த 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச்சென்ற சட்டவிரோத படகொன்றே இவ்வாறு தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இயந்திர கோளாறு காரணமாகவே படகு தத்தளித்துக் கொண்டிருப்பதாக ரேடார் தொடர்புபாடல் மூலமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டியில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி: 13வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 06:06.41 AM GMT ]
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயில் மோதுண்டு, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சமன் குமார என்ற 24 வயது இளைஞரே பலியாகியுள்ளார்.
மருதானையில் இருந்து அலுத்கம நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.
அதேவேளை நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை - வட்டகொட மடக்கும்புர தோட்டத்தில் வசிக்கும் 13வயது சிறுமியை பல காலமாக துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை கர்ப்பமாக்கிய, திருமணமான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரையே தலவாக்கலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மூன்றரை மாத கர்ப்பிணியான இந்த சிறுமியின் கருவை கலைக்க கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கைகளினால், சிறுமி கடுமையாக சுகவீனமுற்றிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் தலையிட்டு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆபத்தான நிலைமையில் இருக்கும் சிறுமி தற்போது பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டி சாரதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten