தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

வடக்கில் எல்லா விடயங்களிலும் இராணுவம் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும்! ஜேவிபி

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட சீனாவுக்கு அனுமதி!- அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 08:10.08 AM GMT ]
இலங்கையின் தெற்கு, வடமேல், மேற்கு கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடும் உரிமைகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமொன்றை செயற்படுத்தி வருகிறது என அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டை முதல் புத்தளம் வரை நீண்டு செல்லும் இந்த கடற்பரப்பை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 12 சீன மீன்பிடி படகுகள் பிரதேசத்தில் மீ்ன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவீன தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட சீனாவின் இந்த மீன்பிடி படகுகள் ஒரே நேரத்தில் பெருந்தொகை மீன்களை பிடித்து வருகின்றன.
இதனால் தொழிற்நுட்ப வசதிகள் குறைந்த இலங்கை மீனவர்கள் தமது வாழ்க்கை கொண்டு நடந்துவதற்கு தேவையான மீன்களை கூட பிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சீனாவுக்கு இந்த கடற்பரப்பு வழங்கப்பட்டால், அந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் உள்நாட்டு மீனவர்கள் தமது தொழில்களை கைவிட வேண்டிய நிலைமை ஏற்படும்.
12 மீன்பிடி படகுகளில் ஏற்படுத்தப்படும் அழிவுகள், முழு பிரதேசமும் சீனாவுக்கு வழங்கப்பட்ட பின்னர், நூறு மடங்காக அதிகரிக்கும்.
தொழில்நுட்ப வசதிகள் இல்லாத மீனவர்கள் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியாத நிலைமை உருவாகும் என்றார்.

வடக்கில் எல்லா விடயங்களிலும் இராணுவம் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும்! ஜேவிபி
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 07:28.05 AM GMT ]
வடக்கில் தேர்தலில் மட்டுமல்லாமல், எல்லா விடயங்களிலுமே இராணுவம் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஜேவிபி கூறியுள்ளது.
யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன.
எனவே சிவில் நிர்வாக நடவடிக்கைகள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவது, பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையில் தலையிடுவது போன்ற செயற்பாடுகளை இராணுவம் நிறுத்த வேண்டும்.
வடக்கில் இராணுவம் தனக்குரிய பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்.
பொலிசார் தமக்குரிய சிவில் நிர்வாகக் கடமைகளைச் செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள் தமது வேலைகளைத் தாங்கள் செய்ய வேண்டும்.
இதுவே ஜேவிபியின் நிலைப்பாடு.'' என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கா வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்திற்குரிய வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து வடபகுதி மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை இன்னும் தோன்றவில்லை.
இராணுவம் ஆக்கிரமிப்பு செய்வதைப் போன்று வடக்கில் நிலை கொண்டிருக்கின்றது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுவே எமது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten