தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்படாவிட்டால் தெரிவுக்குழுவில் பங்கெடுப்பது பயனற்றது: சம்பிக்க ரணவக்க

அரசிடம் 25 கோடி ரூபா பணத்தை பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்: தயாசிறி ஜயசேகர
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 06:42.28 AM GMT ]
25 கோடி ரூபா பணத்தை பெற்று கொண்டே அரசாங்கத்தில், தான் இணைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகல் ஹெட்டிபொல நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தயாசிறி ஜயசேகர 25 கோடி ரூபவை வாங்கி கொண்டு அரசுடன் இணைந்து விட்டார் என்று கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து சென்றவர்கள் மீது அப்படியான குற்றச்சாட்டுகளை அந்த கட்சி முன்வைத்தது.  ஆனால் தயாசிறிய ஜயசேகர பணத்திற்கு அடிப்பணிந்தவன் கிடையாது. என்மீது இந்த குற்றச்சாட்டை சுமத்திய ஹரின் பெர்ணான்டோ மூன்றாம் தர அரசியல் குழியில் விழுந்துள்ளமை குறித்து வெட்கப்படுகிறேன்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியின் மகனுக்கு பணம் பெறுமதியானதாக இருந்தாலும் எனக்கு பணம் பெறுமதியானதல்ல என்றார்.
அதேவேளை தயாசிறி ஜயகேகர, இலங்கை வங்கியில் இருந்து 9 கோடி ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ளதாகவும் அரசாங்கத்திடம் இருந்து பெற்று கொண்ட பணத்தில் அதனை திரும்ப செலுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
பங்கு சந்தையில் செய்திருந்த முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே அவர் இலங்கை வங்கியிடம் இருந்து 9 கோடி ரூபாவை கடனாக பெற்றிருந்தாகவும் அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருந்த அவர், திடீரென அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்படாவிட்டால் தெரிவுக்குழுவில் பங்கெடுப்பது பயனற்றது: சம்பிக்க ரணவக்க
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 06:25.39 AM GMT ]
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படாவிட்டால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுப்பதில் எந்த பயனுமில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக வெளியிடப்பட உள்ள அறிக்கையை ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழுவில் சமர்பித்து, அது பற்றி ஆராய்ந்த பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி உட்பட பிரிவினைவாத அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்.
அவற்றை நீக்காது போனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதில் பிரயோசனமில்லை என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten