எங்கே செல்லும் இந்தப் பாதை: யாரோ-யாரோ அறிவார் !
பருத்தித்துறையில் விடுதலைப் புலிகளின் சுரங்கம் உள்ளது என்று சில சிங்கள ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட, அப்படியே அதனை தமிழில் மொழிபெயர்த்து சில இணையங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் உண்மை நிலை வேறாக இருக்கிறது. அதாவது புலிகளின் சுரங்கம் என்று சொல்லப்படும் இக் குழியை , பொலிசாரோ இல்லை இராணுவத்தினரோ சென்று ஆராயவில்லை. செய்திகள் அடிபட்டவேளை அங்கே பொலிசார் சென்று அக் குழியை சீல் வைத்தார்கள். அவ்வளவு தான். பின்னர் அவர்கள் இது தொடர்பாக எதனையும் ஆரயவே இல்லை. இது பாழடைந்த வடிகால் குழாயாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இக் குழி தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டது என்பது பலருக்கு தெரியாது. அத்தோடு புலிகள் யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை பருத்தித்துறையில் எந்த ஒரு சுரங்கப் பாதையையும் அமைக்கவில்லை என்றும், அவர்களுக்கு அவ்வாறு ஒரு தேவை இருந்திருக்கவில்லை என்றும் முன் நாள் புலிகள் உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
இலங்கையர் ஒருமைப்பாடு மையத்திற்கு வந்த வெலிக்கடை நினைவு !
30 July, 2013 by admin
வெலிக்கடை சிறைச்சாலையில், குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட அரசியல் கைதிகள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவு நாள் ஒன்று பாரிசில் நடைபெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நினைவு நாள் நிகழ்வை நடத்தியது பிரான்ஸ் இலங்கைத் தூதரகத்தின் ஆசியோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமாகும். பேரினவாதத்தால் கண்கள் தோண்டப்பட்டு, உறுப்புக்கள் அறுக்கப்பட்டு விலங்குத் தனமாகக் கொல்லப்பட்ட கைதிகளின் நினைவஞ்சலியை அதே பேரினவாதத்தின் தொங்குதசைகளே நடத்தின. தேசியத்திற்காகப் போராடுகிறோம் என்று மக்களின் அவலங்களை விற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இவர்கள்.
ஈ.பி.டி.பி, சிறீ டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்-பத்மநாபா-, பிள்ளையான் குழு போன்றவற்றின் ஆதரவோடு இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்திவிட்டுத் திரும்பியவர்களும் தமிழ் மக்கள் உரிமைக்காகப் போராடவேண்டும் என்று வேறு போட்டு வைத்திருக்கிறார்கள். ஆடு நனைகிறது என்று ஓனாய்கள் இரத்தக்கண்ணீர் வடித்த கதையாக அல்லவா உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten