[ புதன்கிழமை, 31 யூலை 2013, 02:42.06 AM GMT ]
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் நான் இணங்குகின்றேன்.
இலங்கையின் 14 மாவட்டங்களிலும் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு சம நேரத்தில் நடைபெற்றது.
ஆளும் வேட்பாளராக போட்டியிடுவதற்கு உத்தேசித்திருந்தேன்.
தகுதியானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது.
எனினும், சுயாதீனமான முறையில் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
கட்சியை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் தேசிய சுனாமி ஒத்திகை- புணானையில் இாணுவ முகாமை அகற்றுமாறு யோகேஸ்வரன் எம்பி வேண்டுகோள்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 02:17.55 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி முன்னாயத்த ஒத்திகை இன்று புதுக்குடியிருப்பு வடக்கு கிராமத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த சுனாமி முன்னாயத்த ஒத்திகையில், இராணவத்தினர், பொலிசார், கிராம உத்தியோகத்தர், மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ அலுவலக அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த அனர்த்த ஒத்திகையின் போது புதுக்குடியிருப்பு வடக்கு கிராம மக்கள் அக்கிராமத்திலுள்ள கண்ணகி மகா வித்தியாலத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு விழிப்புணர்வு முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
புணானையில் இாணுவ முகாமை அகற்றுமாறு யோகேஸ்வரன் எம்பி வேண்டுகோள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுமாறும், இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மீள்டியேற்ற அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புணாணை பகுதியில் தாபிக்கப்படும் இராணுவ முகாமை தடுத்து, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற உதவுமாறும் கேட்டுக் கொண்டேன். அதாவது கிரான் பிரதேசத்தின் புணாணை மேற்கு, வாகரைப் பிரதேசத்தின் புணாணை கிழக்கு பகுதியில் கடந்த 1990ம் ஆண்டளவில் நடைபெற்ற கொடிய தாக்குதல் முயற்சியால் 35 பேர் கொல்லப்பட்டும், 13 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில் அன்று இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழைச்சேனை உட்பட்ட பகுதிகளில் உறவினர் வீடுகளில் வாழ்கின்றனர். இவர்களை அன்று இராணுவமே தாக்கியது. இதன் அடிப்படையிலேயே வழக்கும் நடைபெற்றது.
ஆனால் அவ்வேளைக்கு பின் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய இராணுவம் தற்போது அங்கு மீண்டும் முகாம் அமைக்கின்றது. இதனால் இப்பகுதி மக்கள் மீள்குடியமர பயப்படுகின்றனர்.
எனவே இராணுவ முகாமை இங்கிருந்து அகற்றி இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் இடங்களில் குடியமர்துவதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளை வழங்குமாறும் இம்மக்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் பிரிவை தாபிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தேன்.
அத்தோடு இக்கிராம மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை கிராமத்தில் வாழ்வதையும் இங்கு சுட்டிக்காட்டினேன்.
மேலும் கிரான் பிரதேசத்திலுள்ள வடமுனை, ஊத்துச்சேனை மக்கள் மீள்குடியேறியும், வீடு வசதி இன்றி காணப்படுவதையும் இவர்களுக்கு வீடு உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறும் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதி மீள்குடியேற்ற மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தேன்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய தோணிதாட்டமடு கிராம மக்கள் வீடு வசதி உட்பட அடிப்படை வசதி இன்றி காணப்படுவதாகவும், இவர்கள் சார்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தேன்.
இவ்விடயமாக தெளிவாக கேட்டறிந்த மீள்குடியேற்ற அமைச்சர் இவ்விடயமாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மீள்குடியேற்றப்படாத மக்களை மீள்குடியேற்றவும், மீள்குடியேறிய மக்கள் சார்பாக விடுக்கப்பட்ட வீடு உட்பட்ட அடிப்படை வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை பணித்துள்ளார்.
இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தற்போது இவ்விடயமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டி தனக்கு மடல் அனுப்பியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten