கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை, முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி: தமிழ் புத்திஜீவிகள் அதிருப்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 07:01.59 AM GMT ]
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இந்த முயற்சி தொடர்பில் கல்முனை வாழ் தமிழ் புத்திஜீவிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கச்சதீவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய தேசிய கொடியேற்றப்படும் என, அந்த கட்சி யின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
கல்முனையில் கடந்த 25 வருட காலமாக உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருமாறு தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் இன ரீதியாக பிரதேச செயலகங்கள் இருக்க முடியாது என தெரிவித்துள்ள பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கல்முனை தமிழ்ப்பிரிவு செயலகம் மற்றும் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகம் ஆகியவற்றை இணைத்து சகல இனங்களுக்கும் பொதுவான ஏ தரத்திலான கல்முனை பிரதேச செயலகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
கல்முனையில் இயங்கும் இரண்டு பிரதேச செயலகங்களும் இன ரீதியாக செயற்படுவதாகவும் அந்தந்த இனத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதினாலும் இதனால் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான சிக்கலை தீர்த்து வைக்கும் வகையில் ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கல்முனை பிரதேச செயலகங்கள் தொடர்பாக பிரதேச செயலக எல்லை நிர்ணய ஆணைக்குழுவும் கல்முனையில் ஒரு பிரதேச செயலகம் இருப்பதே பொருத்தமாகும் என பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் முடிவால், கடந்த 25 வருட காலமாக கல்முனை வாழ் தமிழ் மக்களின் கனவான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற நிலைப்பாட்டில் இடி விழுந்துள்ளதாக கல்முனை தமிழ் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்முனை தமிழ் பிரிவை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற பேரில் அமைத்து தருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது. இப்பிரிவில் 29 கிராம சேவகர் பிரிவில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பொது நிர்வாக உற்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ள முடிவினை சாதகமாக பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தன்று கச்சதீவில் தேசிய கொடியேற்றப்படும்: அர்ஜூன் சம்பத்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 07:35.46 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவில் தேசிய கொடியேற்ற வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடமும் அனுமதி கேட்போம். அங்கு நமது தேசிய கொடி பறக்க அனுமதி உள்ளது.
கச்சதீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும் அங்கு இந்திய, தேசிய கொடி பறக்கவும் தமிழக மற்றும் மத்தியரசு, ஏற்பாடு செய்ய வேண்டும்.
அரசு கொடியேற்ற மறுத்தால் இந்து மக்கள் கட்சி சார்பில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து கொடியேற்றி உரிமையை நிலை நிறுத்துவோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten