தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

வடமாகாண சபைத் தேர்தல்: விமல், சம்பிக்க வாயடைத்து போய் மௌனித்துள்ளனர்: கே. வேலாயுதம் சாடல்

யாழில் பொது இடத்தில் மது அருந்திய அரச ஊழியர் உட்பட நால்வர் கைது - யாழ், பழ உற்பத்தியில் பாரிய வளர்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 06:35.54 AM GMT ]
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் மதுபானம் அருந்திய அரச ஊழியர் உட்பட 04 பேரை சுன்னாகம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்கள் சுன்னாகத்தில் பொது இடத்தில் பகல் வேளையில் மதுபானம் அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் மேற்கு பூதராயர் கோவிலடி பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் இவர்களை கைதுசெய்தனர். .
முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் வந்த இளைஞர்களே மது அருந்திக் கொண்டிருந்தனர் எனவும் முச்சக்கர வண்டியில் வந்தவாகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் இன்று சுன்னாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
யாழில் விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியில் பழங்களின் உற்பத்தி அதிகரிப்பு: யாழ்.மாவட்ட செயலகம்
யாழ்.மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியில் பழங்களின் உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது என யாழ் மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் 157 ஹெக்டயர் நிலப்பரப்பில் பப்பாசிச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 4396 மெற்றிக் தொன் உற்பத்தி கிடைத்துள்ளது இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த பழ உற்பத்தியானது, தேசிய உற்றபத்தியில் மாவட்டத்தின் பங்களிப்பாக 5.20 வீதத்தை கொண்டதாக காணப்படுகிறது.
இதே போல் திராட்சைப் பயிர்ச்செய்கையும் பாரியளவில் வளர்ச்சி கண்டுள்ளதுடன் இந்த வருடம் 130 ஹெட்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட திராட்சையின் மூலம் 3900 மெற்றிக்தொன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மற்றும் வாழைப் பயிர்ச் செய்கையின் அளவும் அதிகரித்துள்ளதுடன் இந்த வருடம் 1076 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட வாழைப்பயிர்ச் செய்கையின் மூலம் 27,976 மெற்றிக் தொன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண சபைத் தேர்தல்: விமல், சம்பிக்க வாயடைத்து போய் மௌனித்துள்ளனர்: கே. வேலாயுதம் சாடல்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 06:47.51 AM GMT ]
நாட்டில் உள்ள ஏனைய மாகாண சபைகளை கலைத்து தேர்­தல்­க­ளை நடத்­து­வதில் அதிக அக்­கறை காட்டும் அர­சாங்கம், வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­த தயங்கி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.
கொழும்பு இரா­ஜ­கி­ரி­யவில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அர­சாங்­கத்தின் அடி­யாட்­களை ஏவி, வடக்கு மாகாண சபைத் தேர்­தலை தடுக்க பல நட­வ­டிக்­கைகள் எடுத்த போதிலும் அரசின் அந்த முயற்­சிகள் தோல்வியடைந்து விட்டன.
அர­சாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள போவதாக கூறி­யது. எனினும் அதனை தற்போது செய்ய முடியாது போயுள்ளது.
13வது திருத்தச் சட்டத்திற்கு அர­சாங்­கத்­தினால் ஏவி­வி­டப்­பட்ட விமல் வீர­வன்ச, சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் தற்போது வாயடைத்து போய் மௌனித்துள்ளனர்.
தமி­ழர்கள் பிரி­வினை வாதத்தை தூண்டு­கின்­றனர். அதி­கா­ரப்­ப­கிர்வை கேட்­கின்­றனர் என அர­சாங்­க தரப்பினர் கூறு­கின்­றனர். ஆனால், அதி­காரப் பகிர்வை அன்று சிங்களவர்களே கோரி­நின்­றனர். இவை அர­சாங்­கத்­துக்கு ஞாப­கத்தில் இல்லை.
தமிழர் ஆயுதம் ஏந்­தி­ய­வர்கள் என அரசு கூறுகிறது. . ஆனால், சிங்­க­ள­வர்­களே ஆரம்­பத்தில் ஆயுதம் ஏந்­தினர். ஆனால், அவை மறக்­கப்­பட்டு இன்று தமி­ழர்கள் மீது முழுப் பழி­யையும் சுமத்தி தமி­ழர்கள் ஓரங்­கட்­டப்­பட்­டுள்­ளனர் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten