தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு அரசு வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ளது - திஸ்ஸ அத்தநாயக்க!

ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு: மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 09:24.41 AM GMT ]
வல்வெட்டித்துறைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நவரத்தினம் ராகவன் (வயது 23) மாடத்தை வல்வெட்டித் துறை என்ற இடத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் நேற்று முன் தினம் இரவு முதல் காணாமற் போயிருந்தார்.
இந்நிலையில், நேற்றுக் காலை மடந்தை பெரிய தம்பிரான் ஆலயதரிசன மண்டப வாயிலில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
சடலம் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் பிரிவில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவத்தில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரும், யாழ்.ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபருமே இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டுத் திருட்டில் நபர் சாவகச்சேரிப் பொலிசாரினால் கைது
சாவகச்சேரிப் பகுதயில் ஆட்டுத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் கடந்த 19 ம் திகதி இடம் பெற்றுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரிப் பகுதியில் தரவையில் மேயவிடப்பட்டு இருந்த சுமார் எண்ணாயிரம் ரூபா பெறுமதியான ஆட்டை திருட்டுத்தனமாக பிடித்து கடத்திக் கொண்டு சென்ற வேளையில் சந்தேகம் கொண்ட பொது மக்கள் விசாரித்ததைத் தொடர்நது சந்தேக நபர் பொது மக்களினால் பிடிக்கப்பட்டார்.
மன்னார் உப்புக்குளத்தை சோந்த சந்தேக நபர் சாவகச்சேரிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை திருட்டு ஆட்டை இறைச்சிக்காக வெட்டி பங்கு போட்ட வேறு ஒருவர் சாவகச்சேரிப் பொலிசாரினால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, உடனடியாக செயலில் இறங்கிய பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று இறைச்சி பங்க போட்வரை கைது செய்ததுடன் இறைச்சியையும் மீட்டுள்ளார்கள்.
வியாழக்கிழமை இடம் பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நேற்று பிற்பகல் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு அரசு வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ளது - திஸ்ஸ அத்தநாயக்க
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 10:11.20 AM GMT ]
கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பொலநறுவை பக்கமுன பகுதியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் தனது பிரபலத்தினால் தேர்தலில் வெல்ல முடியுமொன்றால் ஏன் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டும்?.
அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை இது காட்டுகிறது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரசாரங்களை உளரீதியாக வீழ்த்தி, தேர்தலில் வெற்றிப்பெற அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
கோடிக்கணக்கில் பணத்தை விநியோகித்து, பதவி, சிறப்புரிமைகளை வழங்கி, ஊடகங்கள பயன்படுத்தி விமர்சித்த போதும் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த முடியாது என்பதை ராஜபக்ச அரசாங்கத்திற்கு கூறி வைக்க விரும்புகிறோம்.
அரசாங்கம் தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு செல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்காளர்களை உளரீதியாக தட்டியெழுப்புவதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்து வருகிறது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten