தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

அசாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டி- ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

துருக்கிப் பிரஜைகள் இருவர் கைது- ஆஸி.இலிருந்து 1300 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 03:06.05 AM GMT ]
கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு துருக்கி நாட்டுப் பிரஜைகளை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
போலியான கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 57 கடனட்டைகளும், பத்து லட்ச ரூபாவிற்கு அதிகமான பணமும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த துருக்கிப் பிரஜைகள் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாட்டு வங்கிகளில் போலிக் கடனட்டைகளைப் பயன்படுத்தி பாரியளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றுள்ளனர்.
இலங்கை தனியார் வங்கிகளில் பத்து லட்ச ரூபாவிற்கு மேல் மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த கடனட்டை மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பெல்ஜியத்தில் இருப்பதாக விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது.
2012 ஆகஸ்ட் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 1100 பேர் பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருதற்கான காரணிகளை கண்டறிய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் சொன்யா கோப் தெரிவித்துள்ளார்.
உரிய வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளும் இவ்வாறு நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
எனவே சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணத்தை வழங்குவது பயனற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டி- ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:55.23 AM GMT ]
தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் கொழும்பு பிரதி மேயருமான அசாத் சாலி, இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அசாத் சாலி, யானைச் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் அசாத் சாலி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அசாத் சாலி இணைக்கப்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வடமேல் மற்றும் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் மேல் மற்றும் தென் மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten