தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்களை தேடுகிறது இராணுவம்!- இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு - தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் விபரம்

போதை பாணி மருந்து விற்ற இருவர் ஏறாவூரில் கைது! சுற்றுலா விசாவில் வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 11:39.24 PM GMT ]
இருமலுக்குப் பாவிக்கலாம் எனக்கூறி ஒரு வகைப் போதை நிறைந்த பாணி மருந்தை விற்றுக் கொண்டிருந்த இருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்டபோது மேற்படி இருவரும் போதை பாணி மருந்துடன் சிக்கியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை பின்னிரவில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா விசாவில் வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு அபராதம்
சுற்றுலா விசாவில் வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் வாழைச்சேனை பாசிக்குடாவில் வைத்து கைதான இந்திய வியாபாரிக்கு இரண்டாயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், மூன்று தினங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை ராஜகோபால் என்பவர் பாசிக்குடா பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று புதன்கிழமை மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சந்தேக நபரை விசாரணை செய்த வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹீஸைன் சந்தேக நபர் தனக்கு வழங்கப்பட்ட விசாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டதுடன், மூன்று தினங்களுக்குள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று விட வேண்டும் என்றும் தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
 டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
வாழைச்சேனை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளினதும், வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் இவ்டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றது.
வீதிகளில் இருந்த குப்பைகளை அகற்றியதுடன், வீடு வீடாகச் சென்று டெங்கு பரவக் கூடிய இடங்களை இணங்கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், டெங்கு நோயினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் பங்குபற்றிய ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 44 பேருக்கு பகல் போசனத்துடன் ஒருவருக்கு தலா ஐநூறு ரூபாய் வீதம் அல்-கிம்மா நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்களை தேடுகிறது இராணுவம்!- இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு - தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் விபரம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:00.34 AM GMT ]
இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வடமாகாணத்தில் ஆளுங்கட்சிக்காக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை தொடங்கின.
எனினும் பிரதான கட்சியின் உறுப்பினர்கள் யாரும் முதல் நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வருவதாக கூறும் அதன் தலைவர் இரா சம்பந்தன், இன்னும் ஒரிரு நாட்களில் அவை சமர்ப்பிக்கப்படும் என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
கூட்டமைப்பிலுள்ள ஐந்து கட்சியின் தலைவர்களுடைய பூரண சம்மதத்துடன் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணின் உறுப்பினர்கள் இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட விரும்பினால், அதற்கு எவ்விதமான ஆட்சேபனையும் இருக்க முடியாது என்றும், அதற்கு பரிபூரணமான ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் விபரம்
வட மாகாணசபை தேர்தலில்  தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் சார்பில் போட்டியிடுவோர் தெரிவு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா. சங்கையா தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் மத்திய பொதுக் குழு கூட்டம் யாழ். மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களுக்கான வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது.
யாழ். மாவட்டம்
 யாழ். மாவட்டத்திற்கு கந்தப்பர் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவும், கணபதிப்பிள்ளை தருமலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். 
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரியும், கந்தசாமி திருலோகமூர்த்தியும், வினுபானந்தகுமாரி கேதுரெட்ணமும் தெரிவு செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேரி கமலா குணசீலன்  ஆகியோரே  தமிழர் விடுதலை கூட்டணியின்  சார்பில் தெரிவு செய்யப்பட்டதாக நிர்வாக செயலாளர் மேலும் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten