தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

“அறப்போர் ஆவணப்படம்”- உலகை தமிழீழ விடுதலை உரிமைப்போர் நோக்கி நகர்த்தும்: காசி ஆனந்தன் உரை

தேர்தல் முடிந்த பின்னர் பொருட்களின் விலை அதிகரிக்கும்- தேர்தலில் ஒத்துழைப்பு வழங்குவதில்லையென ஐ.தே.கவின் உறுப்பினர்கள் தீர்மானம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 10:20.36 AM GMT ]
மாகாண சபைத் தேர்தல் காரணமாக பொருட்களின் விலையேற்றம் என்ற மாடு தூணில் கட்டப்பட்டிருப்பதாகவும் தேர்தல் முடிவடைந்த பின், அந்த மாடு அவிழ்த்து விடப்படும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே சமையல் எரிவாயு, பால் மா போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக அவற்றின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம், அனுமதி வழங்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அதற்கான அனுமதி வழங்கப்படும்.
ஓரிருவர் அரசாங்கத்தின் பக்கம் தாவிய பின்னர், அதனை கண்காட்சியாக வைத்து அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜகருண,  அரசாங்க நிறுவனங்களில் 13, 200 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், இலாபத்தில் இயங்கி வந்த அந்த நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளன.
நஷ்டத்தில் இயங்கும் இ்ந்த நிறுவனங்களுக்கு மூன்று அரச வங்கிகளே கடன்களை வழங்கியுள்ளன. இதனால் அந்த வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன என தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலில் பங்களிப்புகளை வழங்குவதில்லை!- ஐ.தே.கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்
ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்புக்காக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை மாகாண சபைத் தேர்தலில் ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தமது ஒழுக்காற்று விசாரணைகள் அதிகாரபூர்வமாக நிறைவடையும் வரை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் உதவ போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித ரங்கே பண்டார, அசோக அபேசிங்க ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஊடாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், கட்சியை ஐக்கியப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்காது போனால், தேர்தலில் நேரடியாக பங்களிப்புகளை வழங்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, கபீர் ஹசீம் ஆகியோர் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட வேண்டுமாயின் முதலமைச்சர் வேட்பாளராக தான் நிறுத்தப்பட வேண்டும்!- சதாசிவம்
எதிர்வரும் மத்திய மாகாண சபை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டுமாயின், தனக்கு முதலமைச்சர் வேட்பாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக்கட்சி இந்த அங்கீகாரத்தை வழங்காவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நடைபெறவுள்ள மத்திய மாகாண சபை தேர்தல் தொடர்பாக நாம் தொடர்ந்து அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தோம்.இதன் காரணமாகவே எமது நிலைப்பாடு தொடர்பாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்தோம்.
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கத்தினர்கள் அனைவரும் நாம் ஏன் முதலமைச்சர் பதவியை கேட்க கூடாது?என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
நாம் தொடர்ந்து ஜக்கிய தேசிய கட்சிக்கு எமது ஆதரவை வழங்கி வருகின்றோம். அப்படி இருக்கும் போது முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முழுத்தகுதியும் எனக்கு இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
நான் 1988 ஆம் ஆண்டு முதல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு எனக்கு அரசியல் அனுபவமும் இருப்பதன் காரணமாகவே இந்த பதவியை நான் கோருகிறேன். பெருமளவிலான சிறுபான்மை மக்கள் இங்கு வாழ்கின்றனர். என்வே இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்கு எமது கட்சி வந்தது என்றார்.
“அறப்போர் ஆவணப்படம்”- உலகை தமிழீழ விடுதலை உரிமைப்போர் நோக்கி நகர்த்தும்: காசி ஆனந்தன் உரை
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 09:17.55 AM GMT ]
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறப்போர்’ ஆவணப்படம் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். அவ்வுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டு மாணவர்களை, தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொல்லுவதை விட தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என்று நான் சொல்லுகின்றேன். உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதலை கொண்டுவந்தவர்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி அவர்கள் யார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அவர்களின் ஆற்றல் மறைந்து கிடந்தது மாணவர்கள் போராளிகள் என்பதை நிறுவினார்கள் நிலைநாட்டினார்கள் அதனை நாங்கள் பார்த்தோம் மாணவர்கள் அப்படித்தான் வரலாற்றில் பெரிதும் இருந்திருக் கின்றார்கள்.
சிங்களவர்கள் தமிழீழ மக்களை ஒடுக்கியபொழுது இந்த மண்ணில் இராஜ ராஜேந்திரன் போன்றவர்கள் சுந்தரபண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து படைஎடுத்துக்கொண்டு வந்து சிங்களவர்களை எதிர்த்து தமிழருக்கு துணையாக இருந்தார்கள் அது அந்தக்காலம்.
இன்று அப்படி இந்த மண்ணில் இருந்து ஓடிவந்து காப்பதற்கு யாரும் இல்லை.இன்று ஏதும் இல்லாத தமிழனுக்கு யாரும் இல்லை இப்படிப்பட்ட மன்னர்களின் உணர்வுகளை மாணவர்களிடம் தான் அந்த எழுச்சியினை பார்க்கமுடிந்தது என்றும் தெரிவித்த காசியானந்தன் அவர்கள்.
இன்று ஈழமண்ணில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஒன்றும் இல்லாத ஒன்றாக 13வது சட்டதிருத்தம் காணப்படுகின்றது முழுக்க முழுக்க சிங்களவர்களால் சிக்கிய அடிமகளாக தமிழர்களை ஆக்குகின்ற முயற்சிதான் 13வது சட்டதிருத்தம் இன்றைக்க அதுதான் தமிழர்களுக்கு எல்லாமான தீர்வு என்று சொல்லப்படுகின்றது அது பச்சைப்பொய் அதில் எதுவுமேகிடையாது.
1833 ஆம் ஆண்டு கோல்புறுக்கால் சொல்லப்பட்டதுதான் தமிழர்களின் தாயகம் வடக்கு கிழக்கின் எல்லைகள் என்று. அவன் தமிழ் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் இணைப்பதற்காக வந்தவன் அதுதான் தமிழர்களின் தாயகம் என்று சொன்னான்.
தாயகத்தின் இன்று சொல்லணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியினை காட்டினார்கள். இங்கு மாணவர்கள் எழுச்சியினை மேற்கொள்ள அமெரிக்காவின் அதிகாரிகள் கூட இந்த போராட்டத்தை பற்றி பேசியிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மாணவர்களுடைய போராட்டம் தான் சிங்களவர்களுடைய எதிரிநாடு என்று தமிழ்நாட்டில் தீர்மானம் போடவைத்தது.
இந்த மாணவர்களின் போராட்டத்தை சிறப்பான ஒருஆவணமாக வெற்றிவேல் உருவாக்கி எடுத்திருக்கின்றார்.
ஒருபாலச்சந்திரனின் படம் உலகினை உலுக்கியது இப்படியான ஆவணங்கள் உலகினை உலுக்கும், உலகினை உருவாக்கும், உலகை தமிழீழ விடுதலை உரிமை போர் நோக்கி நகர்த்தும் என்று உறுதியாக நம்புகின்றேன்.
தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் அடிப்பார்கள் அப்படி அடிக்கின்ற போழுது தமிழ்நாட்டில் மாணவர்கள் நெருப்பாக எழுந்து தமிழீழத்தில் நடக்கின்ற மிகப்பெரிய எழுச்சியான விடுதலைப் போருக்கு தோள் தாருங்கள் என்று நான் மாணவர்களை வேண்டிநிக்கின்றேன் என்றும் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் சென்னை அண்ணாசாலை புக்பாயின்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சி.கபிலன் நிகழ்த்த அரங்க நிகழ்வுகளை கவிபாஸ்கர் தொகுத்து வளங்கினார்.
அறப்போர் ஆவணப்படத்தினை கவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பெற்றுக் கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten