தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

இந்திய மத்திய அரசு தமிழர்களின் மனநிலையை புரிந்துகொண்டுள்ளது: ஜி.கே. வாசன்

பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி திருகோவில் பிரதேசத்தில் மீட்பு- பொலிஸாருக்கு எதிராக 209 முறைப்பாடுகள்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:16.35 PM GMT ]
பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று திருகோவில் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
திருகோவில் வெட்டியடிகுளம் பிரதேசத்தில் உள்ள கல் குகை ஒன்றில் இந்த துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கியை மறைத்து வைத்தவர் யார் என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.
துப்பாக்கி மேலதிக விசாரணைகளுக்காக திருகோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் 209 முறைப்பாடுகள்
பொலிஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட தொல்லைகள் மற்றும் அலைக்கழித்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து 209 முறைப்பாடுகள் கிடைத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
200 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஆணையாளர் கலாநிதி பிரதீப மஹானஹேவா தெரிவித்தார்.
கிடைத்துள்ள முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருவவதாகவும் அவர் கூறினார்.
1996 ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டத்திற்கு அமைய இ்நத விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசு தமிழர்களின் மனநிலையை புரிந்துகொண்டுள்ளது: ஜி.கே. வாசன்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:01.32 PM GMT ]
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு இந்திய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
சென்னை சத்திமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொண்டுள்ளது.
அதன் வெளிப்பாடுதான் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையான பாதுகாப்பு, உரிமை நலன், அதிகாரத்தில் சமபங்கு உள்ளிட்ட அனைத்து சாரம் சங்களையும் உள்ளடக்கியது தான் ராஜீவ்- ஜயவர்த்தன ஒப்பந்தம். அந்த சாரம்சத்தில் எந்த குறையும் வராதபடி நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten