[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 09:10.43 AM GMT ]
நாட்டில் காட்டுச் சட்டமே அமுல்படுத்தப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் நாட்டின் முக்கிய நகரமொன்றில் வைத்து தாக்கப்பட்டுள்ளார் என்றால் சாதாரண மக்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
அதேவேளை, நாடு உக்கிர பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.
இலங்கை மற்றும் மக்கள் வங்கி ஆகியன பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.
அரசாங்கம் சீனாவிடம் கடன் பெற்று, உகண்டாவிற்கு நன்கொடை வழங்கி வருகின்றனது.
நாட்டின் ஒவ்வொருவரும் தலா மூன்று லட்ச ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி! வலிகள் எனக்குத் தெரியும்!- ஆனந்தி எழிலன்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 08:48.34 AM GMT ]
நடந்து முடிந்த போரில் பெருமளவு பெண்களும் சிறுவர்களுமே பாதிக்கப்பட்டுள்ளவர்கள். யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள இவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைப்பு ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
எனவே, அவர்கள் சார்பாக மாகாண மட்டத்தில் குரல் கொடுப்பதற்காகவும், அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவுமே நான் இந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஒரேயொரு பெண் வேட்பாளராகிய ஆனந்தி சசிகரன் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியாகிய ஆனந்தி சசிகரன் கிளிநொச்சி கச்சேரியில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
போரில் கணவனை இழந்த பெண்கள், இறுதிப்போரில் சரணடைந்த ஆண்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் போர் முடிந்த பின்பும் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
அவர்களது பாதுகாப்பு, குடும்பப் பொருளாதாரம், வாழ்வாதாரம் என பலதரப்பட்ட வழிகளில் பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஆயினும் இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுநாள் வரையிலும் உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி என்ற வகையில் அவர்கள் அனுபவிக்கின்ற வேதனைகள் வலிகள் துன்ப துயரங்கள், நெருக்கடிகள் என்பவற்றை நான் நன்கு உணர்வேன்.
இந்தப் பெண்களுடைய பிரச்சினைகளுக்கு மாகாண மட்டத்தில் தீர்வு காண்பதற்கு முயற்சிப்பேன்.. அது முடியாவிட்டால், அதனை தேசிய மட்டத்தில் தீர்வு காண்பதற்கு மாகாண சபையின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்வேன்.
அதேநேரம் இந்தப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி அதற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்வேன்.
என்னைப் போன்றவர்களுக்கு அரசியல் புதிதுதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குப் பெண்களே தீர்வு காண வேண்டியிருக்கின்றது.
வேறு யாராவது எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். அதற்காக அவர்கள் பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே கையாள வேண்டும்.
அந்தப் பிரச்சினைகளுக்கு நாங்களே முகம் கொடுக்க வேண்டும். எனவேதான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளேன் என்றார் ஆனந்தி சசிகரன்.
இறுதி யுத்தத்தின் பின்னர் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த இவரது கணவன் எழிலன் என்ற சசிகரன், அதற்குப் பின்னர், அவர் எங்கு இருக்கின்றார், எப்படி இருக்கின்றார் என்ற தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை.
இதனால், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten