தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது: ஜனாதிபதி

அமைச்சர் மேர்வின் சில்வா கூறுவது பொய்! மாலக சில்வாவுக்கு இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:17.04 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் இன்னமும் நவலோக வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று உறுதியுடன் தெரிவித்துள்ளது.
நகரசபைக்கு அருகில் உள்ள ஒடெல் வாகன தரிப்பிடத்தில் வைத்து மாலக சில்வா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார்.
எனினும் அவருக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேவின் தெரிவித்திருந்தார்.
எனினும் மாலக சில்வா இன்னமும் மருத்துவமனையில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா பொய் கூறுவதாகவும் இணையத்தளம் கூறியுள்ளது.

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 02:35.47 AM GMT ]
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத காரணத்தினால் வடக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் பிரச்சினை கிடையாது.
நாட்டுக்கு பாதகம் ஏற்படக் கூடிய எந்த விடயத்தையும் நான் செய்ய மாட்டேன். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை கூட்ட முடியும்.
30 ஆண்டு போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியை உலக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
தயா மாஸ்டரை வேட்பாளராக இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். வேட்பாளர் தெரிவுப் பணிகளை நான் மேற்கொள்ளவில்லை. அவற்றை அமைச்சர் டலஸ் அழப்பெருமவே மேற்கொண்டார்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten