[ புதன்கிழமை, 31 யூலை 2013, 02:47.31 AM GMT ]
இது தொடர்பில் விசாரணை நடாத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார் வீட்டிலுள்ளவர்களை வெளியேற்றியதுடன் அங்கிருந்த பொருட்களையும் அள்ளி வீசி அடாவடித்தனம் புரிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முறைப்பாடுகள் குறித்து சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
விசாரணை நடாத்தும் அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்களினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பலர் பேசினாலும் இதுவரையில் அதற்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுத்ததில்லை.
வீடுகளை விடவும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
டை கோர்ட் அணிந்து கம்பீரத்துடன் இருக்கும் அதிகாரிகள் செய்யும் இழி செயல்களை நாம் அறிவோம்.
குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற காரணத்தினால் எதிர்காலத்தில் பொலிஸாரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கருத்தரங்கொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டினுள் புகுந்து உடைமைகளை அள்ளி வீசிய பொலிஸார்! முறையிடச் சென்ற குடும்பஸ்தர் கைது
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 05:10.28 AM GMT ]
நேற்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
பொன்னையா வீதி, ஆறுகால்மடம், ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் குடியிருந்தவர்களை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொலிஸாரின் துணையுடன் வீட்டிலிருந்த உடமைகளை இவ்வாறு அடாத்தாக அகற்றியுள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த குடும்பத்தை அந்த வீட்டுக்கு முன்னால் வசிக்கும் குடும்பத்தினரே அங்கு குடியமர்த்தியுள்ளனர்.
அவ்வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவர்களிடமிருந்து வீட்டைத் தாம் விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறியே தமக்கு வீடு வாடகைக்குத் தரப்பட்டு வாடகைப் பணம் அறவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படாமலேயே இவ்வாறு நடந்து கொண்டனர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பாடசாலைச் சீருடையில் வீதியில் நின்றிருந்ததோடு மற்றைய சிறுவர்கள் பசியினால் அழுதவண்ணம் வீதியில் நின்றிருந்தனர்.
வெளிநாட்டிலிருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்த வீட்டின் உரிமையாளர்களான தாயும் மகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரின் உதவியுடன் அங்கு வந்து வீட்டில் குடியிருந்தவர் களை வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று குறித்த வீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் மதியம் சமைத்த சாப்பாடு உட்பட அனைத்தையும் தூக்கி வெளியே வீசியுள்ளதுடன், கதவைப் பூட்டித் திறப்பை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.
இதனையடுத்து, தம்மை வீட்டில் இருந்து வெளியேற்றியமை மற்றும் பொருள்களைத் தூக்கி வீசியமை தொடர்பான முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்ற குறித்த குடும்பத் தலைவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரியவருகிறது.
இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்சிகேராவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten