மாதம் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஒரு கேணல் தரத்தில் உள்ள இராணுவச் சிப்பாயின் மனைவி, ஏன் லண்டனில் வந்து வேலைசெய்யவேண்டும் ? அதுவும் தமிழ் கடை ஒன்றில் ஏன் வேலைசெய்யவேண்டும் ? இதனை அத் தமிழ் கடையின் உரிமையாளர் அறிவாரா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட உரிமையாளரை அவர் ஏமாற்றி அக் கடையில் வேலைசெய்ய வாய்ப்பும் உள்ளது. இந்த சிங்கள யுவதியை இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் உள்ள புகைப்படம் ஒன்றினூடாக அடையாளம் காண முடிகிறது. அவர் தனது கணவரோடு நிற்கும் புகைப்படம் அங்கே இணைக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்குப் பின்னரே அவர் லண்டன் வந்திருக்கவேண்டும் என்றும் மேலும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட கடை உரிமையாளருக்கு இச் செய்தியை நாம் தெரியப்படுத்தியும் உள்ளோம் என்பதனையும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
லண்டனில் இவ்வாறு பல சிங்களவர்கள் தமிழர்களின் கடைகளில் வேலைபார்த்து வருகிறார்கள். அவர்கள் பாமர சிங்கள மக்கள் என சில பெருந்தன்மைகொண்ட தமிழ் முதலாளிமார்கள் நினைப்பது உண்டு. ஆனால் அவர்கள் பின்புலம் பற்றி அறிந்து அவர்களை வேலைக்கு வைத்திருப்பது நல்லது. சிங்களவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் உறவினர்கள் இலங்கை அரசிலோ அல்லது இலங்கை இராணுவத்தில் இருக்கிறார்களா என்று ஒரு சிறிய கேள்வியைக் கேட்ட பின்னர் அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட சிங்கள யுவதிகளைப் போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் சிலவேளைகளில் தமது முதலாளிமாரையே சிக்கலில் மாட்டிவிடக்கூடும். எத்தனையோ தமிழர்கள் லண்டனில் வேலைதேடி அலைகிறார்கள். அவர்களுக்கு தமிழ் முதலாளிமார்கள் உதவலாமே ? இதனை நாம் பணிவாகவும் உரிமையோடும் வேண்டி நிற்கிறோம்.
Geen opmerkingen:
Een reactie posten