இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்குள் உள்ளது!- சிங்கள ஊடகம் - இலங்கையின் தனிநபர் கடன் 3 லட்சமாக அதிகரித்துள்ளது: ரவி
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:43.32 AM GMT ]
நிதியமைச்சின் செயலாளர் தேவையற்ற விதத்தில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளின் கணக்குகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அதனை இயக்குகின்றமையே இதற்கான காரணம் என்று அச்செய்திதாள் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவீனங்களை குறைக்குமாறு அண்மையில் நிதியமைச்சின் செயலாளர் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டமைக்கும் இதுவே காரணம் என்று ராவய சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 25ம் திகதியன்று அரச சேவையாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இதன்போது அரச வங்கிகளின் செலவுமீதி 40, 000 மில்லியன்களுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
எனினும் ஜூலை 25ம் திகதியளவில், அரச வங்கிகளின் செலவுமீதி 214,175 மில்லியன்களாக இருந்தது.
இதேவேளை சுகாதார சேவைக்கு வருடாந்தம் ஒதுக்கும் தொகையை 5000 மில்லியன்களால் குறைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் தனிநபர் கடன் 3 லட்சமாக அதிகரித்துள்ளது: ரவி கருணாநாயக்க
இலங்கையில் தனிநபர் கடனானது தற்போது மூன்று லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாழும் மக்களில் ஒருவர் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் மூன்று லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
2012 ஆம் ஆண்டின் இறுதியில் தனிநபர் கடனானது 295, 165 ரூபாவாக இருந்தது. இது அமெரிக்க டொலர்களில் 2321 டொலர்களாகும்.
அதேவேளை இலங்கையின் ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளதால், நாட்டிற்கு பொருளாதார ரீதியில் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனானது தாங்கி கொள்ள முடியாதளவில் அதிகரித்துள்ளது. அரசாங்கம் அதிகளவில் வெளிநாட்டு கடன்களை பெற்று வருவதால், இலங்கை மக்கள் பெரும் கடனாளிகளாக மாறியுள்ளனர் என்றார்.
அக்கரைப்பற்றில் பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை விஷமிகளால் உடைப்பு
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 03:52.55 AM GMT ]
பாடசாலையில் இரவு நேரக் காவலாளி இல்லாத நிலையில், விளக்குகளைப் போடுவதற்காக கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.
சிலை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த அவர், பாடசாலையின் உப அதிபருக்கு இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார். உப அதிபர் சிலை உடைக்கப்பட்டதை பார்வையிட்டதுடன், இது மாணவர்கள் விளையாடும் போது உடைந்து இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எனினும், சிலை உடைக்கப்பட்டமை குறித்து பெற்றோர்களும் இந்து அமைப்புக்களும் இது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயல் என தெரிவித்துள்ளனர்.
இச் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைபாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.
இப் பாடசாலையில் 1949ஆம் ஆண்டு காலப் பகுதியில் விபுலானந்தர் மணிமண்டபம் நிர்மானிக்கப்பட்டபோது மண்டபத்தின் முன்பகுதியில் வீதிக்கு அருகில் விபுலானந்தரின் சிலை நிறுவப்பட்டது.
பின்னர் புதிகாக மணிமண்டப நிர்மானப் பணிகளின்போது இவ் சிலையை அகற்றி பாடசாலையின் அதிபர் காரியாலத்திற்கு முன்பகுதியில் நிலத்தில் தற்காலிகமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten