[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 02:26.46 AM GMT ]
கண்கண்ட சாட்சிகளை கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகரசபைக்கு அருகில் உள்ள ஒடெல் ஆடையகத்தின் வாகன தரிப்பிடத்துக்கு மாலக வாகனத்தில் வந்தபோது நீயா மாலக? என்று கேள்வி எழுப்பிய சாதாரண உடையில் இருந்த இராணுவ வீரர்கள், ஆம் என்று பதில் கூறியதும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது உடைக்கப்பட்ட போத்தலால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே மாலகவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
இரண்டாம் இணைப்பு
பொலிஸாரின் உதவி தேவையில்லை: மேர்வின்
மகனைத் தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாரின் உதவி தேவையில்லை நான் பார்த்துக் கொள்கின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கோழைத்தனமாக மறைந்திருந்து தாக்காமல் நேரில் வந்து மோதிப் பார்க்கவும்.நான் எந்த நேரத்திலும் அதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
எனது தண்டனை காலம் தாழ்த்தப்பட்டாலும், கடவுளின் தண்டனை உரிய முறையில் கிடைக்கும்.
இந்தத் தாக்குதல் சம்பவம் சம்பவம் சில ஊடகங்களுக்கு கல்யாண விருந்துபசாரம் போன்று கொண்டாட்டமாக இருக்கின்றது.எல்லோரையும் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.
எனது எதிரிகள் இன்று நன்றாக உறங்குவார்கள் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
(மூன்றாம் இணைப்பு)
இனந்தெரியாத தரப்பினரால், பொது உறவுகள் அமைச்சர், மர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சந்தேகத்திற்குரியவர்களை இனங்காண்பதற்காக ஒடெல் கட்டிடத் தொகுதியின் வாகன தரிப்பிட்ட கமராக்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
நேற்று மாலை கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள ஒடெல் கட்டிடத்தொகுதியின் வாகன தரப்பிடத்தில் வைத்து சொகுசு வாகனத்தில் வந்த சிலர் மாலக சில்வாவை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர், மாலக சில்வா கொழும்பு நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் சம்பவத்தின் போது அவரது தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது புதல்வர் தாக்கப்பட்டமை குறித்து நேற்றிரவு நவலோக மருத்துவமனை வளாகத்தில் வைத்து அமைச்சர் மேர்வின் சில்வா கருத்து வெளியிடுகையில்,
மயானத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை இதோடு நிறைவடைந்ததாக குறிப்பிட்டார்.
தமது புதல்வரை சிலர் கடத்த முயன்றதாகவும், எனினும் அவர் தற்காத்துக்கொண்டதாகவும், புதல்வர் தமக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்தினரால் கூட்டமைப்பு வேட்பாளர்களான எழிலனின் மனைவி ஆனந்தி, சயந்தனுக்கு அச்சுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 01:51.53 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களான சாவகச்சேரியை சேர்ந்த சட்டவாளர் சயந்தன் மற்றும் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர், அவர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,
இது ஒரு தேர்தல் விதிமுறை மீறலாகும்.
இலங்கை இராணுவத்தினரின் எந்தத் தலையீடுகளும் இன்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என்று, ததேகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிபர் உறுதியளித்திருந்தார்.
இருந்த போதிலும், அதற்கு முரணான வகையில்,வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினமே இராணுவத்தினர் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
இது நீதி நியாயமற்ற செயலாகும்.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கும், ஜனாதிபதிக்கும் முறைப்பாடு செய்யப்படும்.
அத்துடன் இந்த விவகாரம் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கான ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் செயல்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையின் போரின் போது காணாமல் போனோர் தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ளமையை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
இது எதிர்வரும் மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தரும் ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருப்திபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியின் செயலாளரது தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாகியும் அது இயங்கவில்லை.
இந்தநிலையில் அதே ஜனாதிபதியின் செயலாளரால் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அமையவுள்ளமை சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்று பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten