தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

கூட்டமைப்பின் வெற்றி வட-கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்கும்: பொன். செல்வராசா!


ஆசிரியையை மண்டியிட வைத்தவருக்கு தேர்தலில் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 09:23.49 AM GMT ]
தனது மகளை எச்சரித்த புத்தளம் நவோதய பாடசாலையின் ஆசிரியையை மண்டியிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
சந்தேக நபரான முன்னாள் உறுப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாமை, அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றை கனவத்தில் கொண்டு அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நவோதய பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஆசிரியை மண்டியிட வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆனந்த சரத் குமாரவை பதவி விலகுமாறு, சுத்நதிரக்கட்சி கோரியதை அடுத்து, அவர் பதவி விலகினார்.
வடமேல் மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விண்ணப்பம் செய்திருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எதிர்வரும் ஆகஸ்ட் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
கூட்டமைப்பின் வெற்றி வட-கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்கும்: பொன். செல்வராசா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 09:48.27 AM GMT ]
பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டபை்பு வெற்றிப் பெற்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் நிர்ணயிக்கப்படும் என கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச் சட்டத்தை வலுவிழக்க செய்யும் சகல முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான நிலையைில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் வெற்றிப்பெற்றால் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை அதனை பயன்படுத்தவும் முடியும்.
13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல. எனினும் அதையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இருப்பதே போதாது என்ற நிலையில் அதனையும் பறித்தால் அதில் என்ன இருக்க போகிறது.
இதனை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் மௌனமாக உள்ளனர். வெளியில் வாய் திறந்து பேச முடியாத நிலைமையில் அவர்கள் உள்ளனர்.
கிழக்கில் மூன்று இனங்களும் சமமாக வாழ்கின்றனர்.
வடக்கில் அப்படியல்ல, அங்கு தமிழர்களே பெரும்பான்மையானவர்கள். இதனால் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்றால், அதன் மூலம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்க முடியும் என எண்ணுகிறேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten