தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

காலம் மக்ரேக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளது !

12 பேர் சேர்ந்து எனது மகனை கடத்தப் பார்த்தார்கள்: மேர்வின் புலம்பல் !
30 July, 2013 by admin
நேற்றைய தினம்(திங்கள்) கொழும்பில் உள்ள ஷாப்பிங் சென்ரர் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்த மேர்வின் சில்வாவின் மகம் மாலக சில்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் பார்க்கில் நடந்த தகராறு ஒன்றிலேயே இவரைச் சிலர் தாக்கியுள்ளார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தனது மகனை 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தப்பார்த்ததாகவும், ஆனால் தனது மகன் வீரமாகப் போராடி அவர்களிடம் இருந்து விடுபட்டதாகவும் 70 MM பாயாஸ்கோப் படம் காட்டுவது போலக் கூறியுள்ளார் மேர்வின் சில்வா !

ஷாப்பிங் முடித்துக்கொண்டு திரும்பிய மாலக சில்வா , தனது காரை வெளியே எடுக்கும்வேளை அங்கே நின்ற மற்றுமொரு கோஷ்டி இளைஞர்களோடு வாய் தர்கத்தில் ஈடுபட்டார் என்றும், பின்னர் அவர் காரை விட்டு இறங்கிவந்து அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டவேளை, குறித்த கோஷ்டியின் நண்பர்கள் வந்து மாலக சில்வாவை மேலும் தாக்கியதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார். ஆனால் மேர்வின் சில்வாவோ வேறு கதை சொல்லியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் நடந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ஒரு பாப்புலாரிட்டியை கிரியேட் பண்ண அவர் முயற்சிப்பது நன்றாகத் தெரிகிறது. 

போறபோக்கில் பார்த்தால், தனது மகனை யாரோ கடத்த முயற்சிக்கிறார்கள் என்று சொல்லி அவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மேர்வின் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

காலம் மக்ரேக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளது !
31 July, 2013 by admin
காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் காலம் மக்ரே இலங்கை செல்லவுள்ளார். ஆனால் அவர் இலங்கை செல்லும்வேளை அவரைக் கொலைசெய்ய சிலர் திட்டம் தீட்டியிருக்கலாம் என ஆங்கில இணையம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் இலங்கை செல்லும்வேளை அவர்கள் விசா பெற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் இலங்கைக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள விசா தேவையில்லை. இதனைப் பயன்படுத்தியே காலம் மக்ரே இலங்கை செல்லவுள்ளார் எனத் தெரியவருகிறது. அவர் இவ்வாறு செல்லும்வேளை இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை நாடு கடத்தக் கூடும். இருப்பினும் அவரை அதிகாரிகள் இலங்கைக்குள் அனுமதித்தாலும் அவரை கொலை செய்ய சிங்கள தீவிரவாதிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

காலம் மக்ரே அவர்கள் இலங்கை செல்லவுள்ளார் என்ற செய்தி, இலங்கை உள்ள பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பல சிங்கள தீவிரவாதிகளும் பெளத்த பிக்குகளும் அவர்மேல் கடும் கோபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்ட ஆங்கில இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten