பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு காத்தான்குடி நகரசபையில் கண்டனம்- புதிய போக்குவரத்து விதியைத் தளர்த்த நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 03:48.35 AM GMT ]
காத்தான்குடி நகர சபைக் கூட்டம் நேற்று நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸபர் தலைமையில் நடைபெற்ற போது இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவிற்குத் சட்டவிரோதமாக படகில் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தாயொருவரும் அவரது மகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கண்டனத் தீர்மானத்தை நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சபையில் மும்மொழிந்தார் இத்தீர்மானத்தை காத்தான்குடி நகர சபை ஏகமனதாக அங்கீகரித்தது.
முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலை நடாத்திவருகின்றனர். இந்த புனிதமான றமழான் மாதத்திலும் கூட மஹியங்கனை பள்ளிவாயல் மீது தாக்குதல் நடாத்தியதுடன் அப்பள்ளிவாயலையும் மூடிவிட்டுள்ளனர். அத்தோடு இறைச்சி லொறியொன்றையும் பௌத்த தீவிரவாதிகள் நெருப்பு வைத்து தீக்கிரையாக்கியுள்ளனர்.
இவ்வாறு முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாயல்கள் மீது தொடாச்சியாக நடாத்தப்பட்டுவரும் தாக்குதலை காத்தான்குடி நகர சபை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் பின்னணியில் செயற்பட்டுவருபவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இவ்வாறான சம்பவங்களினால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலைமையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இக்கண்டன தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதிகளில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதால் அவ்வீதிகளின் தரத்தினை காத்தான்குடி நகர சபை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன்,
அவ்வீதிகளை பராமரிப்பதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் நகர சபை பொறுப்பேற்கும் போது பராமரிப்பு செலவையும் காத்தான்குடி நகர சபை வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் கோர வேண்டுமென நகர சபை உறுப்பினர் றஊப் ஏ மஜீத் முன் வைத்த மும்மொழிவையும் சபை ஏற்றுக் கொண்டு இவ்வீதிகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை உடனடியாக வீதி அபிவிருத்தி திணைக்களம் சீர்செய்ய வேண்டுமென கோருவதுடன் இவ் வீதிகளை காத்தான்குடி நகர சபை பொறுப்பேற்கும் போது சில நிபந்தனைகளுடனேயே பொறுப்பேற்க வேண்டுமெனவும் ஏகமனதாக இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்றைய காத்தான்குடி நகர சபை அமர்வில் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மற்றும் நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், றஊப் ஏ மஜீட், அலி சப்ரி, எம்.எஸ்.சியாத்,அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல், எம்.நசீர், சல்மா அமீர் ஹம்சா ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
புதிய போக்குவரத்து விதியைத் தளர்த்த நடவடிக்கை
மட்டக்களப்பு மாவடடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென்ற சட்டத்தை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து பொலிசார் வற்புறுத்தி வருகின்றனர்.
அத்தோடு இவ்வாறு செல்லாதவர்களுக்கெதிரக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் போக்குவரத்து பொலிசார் நடவடிக்கை எடுப்பதற்கு முற்படுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் இதனால் எதிர் நோக்கும் சிரமங்கள் குறித்து அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டி மட்டக்களப்பு பெண்களின் கலாசார உடை மற்றும் அந்த உடைகளை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பெண்கள் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த விடயம் தொடர்பில் உடனடியாக இந்த சட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தன்னிடம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்களை கட்டாயமாக இரண்டு கால்களையும் இரண்டு பக்கமும் போட்டுச் செல்ல வேண்டுமென்ற சட்டத்தை போக்குவரத்து பொலிசார் நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைப் பெண்ணும் மகளும் விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 04:04.30 AM GMT ]
கடந்த 4.3.2012 இல் கச்சதீவில் இடம்பெற்ற அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் பங்கேற்று திரும்பிய இராமேஸ்வரம் பக்தர்களின் படகில் திருகோணமலையைச் சேர்ந்த உஷா (32 வயது), மகள் நீரா (6வயது) கள்ளத்தனமாக ஏறி இராமேஸ்வரம் சென்றனர்.
இருவரையும் கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதமாக மண்டபம் முகாமில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று இராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கைப் பெண்ணான உஷாவை விடுதலை செய்ததுடன், 50 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் சரவணகுமார் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இருவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten