தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுடன் பேசத் தயார்: ஜனாதிபதி மஹிந்த! கூட்டமைப்பினர் சிலர் தம்மிடம் பேசியதாக ஜனாதிபதி கூறுகிறார்

கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை பாடசாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 04:26.06 AM GMT ]
கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த இடமாற்றமானது தன்னை பழிவாங்கும் செயல் என குறித்த ஆசிரியர் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அவருக்கான இடமாற்றம் உரிய நடைமுறைகளுக்கு அமையவே வழங்கப்பட்டதாக கல்லூரி அதிபர் உபாலி குணசேகர தெரிவித்தார்.
பாடசாலைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் இருப்பார்களாயின் அவர்களின் விபரங்களை கல்வியமைப்பு கோருவது வழமையான விடயமாகும்.
இதன்படி, வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் குறித்த ஆசிரியையின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார்.
எனினும், தமது இடமாற்றத்தை அவர் விரும்பாத காரணத்தினால் அதனை ரத்து செய்யக் கோரி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுடன் பேசத் தயார்: ஜனாதிபதி மஹிந்த! கூட்டமைப்பினர் சிலர் தம்மிடம் பேசியதாக ஜனாதிபதி கூறுகிறார்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 06:47.36 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் திரு.விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யுத்தத்தின்போது காணாமற்போனோர் தொடர்பில் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஆணைக்குழு எவரினதும் தலையீடு இன்றி சுதந்திரமாக செயற்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
2ம் இணைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தம்மிடம் பேசியதாக ஜனாதிபதி கூறுகிறார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமது அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் பொருட்டு கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுகிறார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
உங்கள் அரசாங்கத்துடன் ஏனைய சில கட்சிகளின் உறுப்பினர்கள் யாரேனும் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்களா? என்று ஊடக பிரதானிகளில் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
இருந்தபோதும், அவ்வாறானவர்களுக்கு தற்போது அரசாங்கத்தின் கதவு மூடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
வடக்கு மக்கள் தற்போது படிப்படையாக ஜனநாயக பாதைக்கு வருவதாக கூறிய ஜனாதிபதி, அதன் ஒருகட்டமாக தற்போது வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் வேட்புரிமை வழங்கப்படாமை தொடர்பில் ஒரு ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டலஸ் அழகப்பெரும, அதிகமானவர்கள் வடக்கு தேர்தலுக்கான வேட்புரிமையை கோரியிருந்ததாகவும், 12 பேரின் பெயர்களை மாத்திரமே பட்டியலில் இணைத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
போட்டியான சூழ்நிலையில் சிறந்த மக்கள் வரவேற்புடையவர்களை மாத்திரம் தெரிவு செய்தாகவும் அமைச்சர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தலுக்கான முதன்மை வேண்பாளர் முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், 13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலும் இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
எந்தவொரு பிரச்சினையாக இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடமேல் மாகாணத்தில் அதிக விரும்பு வாக்குகளை பெற்றவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten