தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு!

கூரையிலிருந்த றோயல் கல்லூரி ஆசிரியை நேற்றிரவு கீழே இறக்கப்பட்டார்!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 12:00.25 AM GMT ]
கொழும்பு, றோயல் கல்லூரியின் இரண்டாவது மாடியில் கூரையின் மீதேறியிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியை நேற்றிரவு கீழே இறக்கப்பட்டார்.
ஆசிரியையிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே அவர் கீழே இறங்க இணக்கம் தெரிவித்தார்.
ஆசிரியையை கீழே இறக்கிய பொலிஸார் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆசிரியையை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த ஆசிரியை 10 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையிலும் அவ்விடத்திலேயே இருப்பதனால் அவரை இறக்குவதற்கான முயற்சிகளை பாதுகாப்பு தரப்பினர் நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர்.
அம்புலன்ஸ் வண்டி, தீயணைப்பு கருவிகள் ஆகியன  தயார் நிலையில் அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவர் உண்ணாவிரதமிருக்கும் இடத்திலிருந்து இரண்டாவது மாடிக்கருகில் மெத்தையும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்று வழங்கிய உறுதிமொழியை அடுத்தே அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு கூரையிலிருந்து இறங்க இணங்கியுள்ளார்.

புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு!
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 11:42.34 PM GMT ]
பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2000ம் ஆண்டு மார்ச் மாதம் 08ம் திகதி பெற்றுக்கொண்ட யசோதரன் சடாச்சரமூர்த்தி எனும் பெயரிலான கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கை ஓகஸ்ட் 13ம் திகதிவரை நீதவான் ஒத்திவைத்தார்.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20ம் திகதி பிரித்தானிய கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடி குழப்பம் வளைவித்த  நபரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3ம் திகதி பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு கடந்த 15ம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பும் விடுத்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரன் மணிமாறன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten