தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

சொந்த நலன்களுக்காக செயற்பட்டவர்கள் தொடர்பில் கோத்தபாய எச்சரிக்கை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் விபரமும் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 01:31.31 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், (புளொட்) வேட்பாளர்களின் விபரங்களை அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம்
புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்
முல்லைத்தீவு மாவட்டம்
கந்தையா சிவநேசன் (பவன்)
வவுனியா மாவட்டம்
வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்)
மன்னார் மாவட்டம்
இருதயராஜா சார்ள்ஸ்
ஆகியோரே வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் சார்பில் போட்டியிடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த நலன்களுக்காக செயற்பட்டவர்கள் தொடர்பில் கோத்தபாய எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 01:07.17 AM GMT ]
விடுதலைப் புலிகளின் அட்டவணைகளுக்கு ஏற்ப செயற்பட்டு மக்களை கஸ்டத்துக்கு உள்ளாக்கியவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
2002 ஆம் ஆண்டில் இருந்து நோர்வேயின் அனுசரணையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது தமது சொந்த நலன்களை கருதி சிலர் செயற்பட்டனர்.
எனினும் இன்று அவர்கள் விடுதலைப் புலிகளால் கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்களிடம் கண்ணீர் வடிப்பதாக கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
உகண்டா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஆங்கில செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியில் இந்த கருத்துக்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பணியாளர்களை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்த போது கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் தூதரகம் ரகசிய பேச்சுக்களை நடத்தி அவர்களை விடுவித்தது.
அதுவும் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகம் கேள்வி எழுப்பிய பின்னரே அந்த பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சிறுவர் போராளிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் கோரிக்கைகளையும் விடுதலைப் புலிகள் செயற்படுத்தவில்லை என்று கோத்தபாய குற்றம் சுமத்தினார்.

Geen opmerkingen:

Een reactie posten